அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு.. உலகின் வள்ளல் பரம்பரை டி20 அணியாக.. ஆர்சிபி மோசமான உலக சாதனை

RCB Team
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வருடம் மகளிர் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதால் ஆடவர் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே திணறலாக செயல்பட்டு வரும் அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ள அந்த அணி அடுத்த 6 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மிகவும் குறைந்து போயுள்ளது. வழக்கம் போல இந்த வருடமும் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் போன்ற பேட்ஸ்மேன்கள் பெங்களூருவின் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை எடுக்கின்றனர்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
ஆனால் பந்து வீச்சில் வள்ளல் பரம்பரையாக செயல்படும் ஆர்சிபி பவுலர்கள் அந்த ரன்களை அப்படியே வாரி வழங்கி வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்து வருகின்றனர். குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் 287 ரன்களை வாரி வழங்கினர். அதனால் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.

அந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சுமாராக பந்து வீசிய பெங்களூருவை அதிரடியாக எதிர்கொண்ட கொல்கத்தா 222/6 ரன்கள் அடித்தது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் பந்து வீச்சில் அதிக முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்த அணி என்ற மோசமான உலக சாதனையை பெங்களூரு படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 29*
2. மிடில்சக்ஸ் அணி : 28
3. பஞ்சாப் கிங்ஸ் : 27
4. கென்ட் அணி : 26

- Advertisement -

மறுபுறம் கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங்கில் முடிந்தளவுக்கு போராடிய பெங்களூரு அணி கடைசியில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற பரிதாப சாதனையையும் பெங்களூரு படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 221 : பெங்களூரு – கொல்கத்தாவுக்கு எதிராக, 2024
2. 218 : இலங்கை ஆர்மி – நெகம்போ சிசி’க்கு எதிராக, 2018
3. 217 : கென்ட் – க்ளோஸ்செஸ்ஷைர்’க்கு எதிராக, 2015

இதையும் படிங்க: நல்லா பாருங்கய்யா அது சிக்ஸ்.. அம்பயர்ஸ் 2 ரன்ஸ் ஏமாத்தீட்டாங்க.. ஆர்சிபி ரசிகர்கள் விமர்சனம்.. உண்மை என்ன?

மொத்தத்தில் காலம் காலமாக பந்து வீச்சில் வள்ளலாக செயல்படும் பெங்களூரு அணி பல எதிரணிகளிடம் அடி வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளது. ஆனால் இவ்வளவு அடி வாங்கியும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதே பெங்களூரு அணியின் பரிதாப நிலையாகும்.

Advertisement