நல்லா பாருங்கய்யா அது சிக்ஸ்.. அம்பயர்ஸ் 2 ரன்ஸ் ஏமாத்தீட்டாங்க.. ஆர்சிபி ரசிகர்கள் விமர்சனம்.. உண்மை என்ன?

Prabhudesai
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 36வது லீக் போட்டி சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50, பில் சால்ட் 48 ரன்கள் எடுத்த உதவியுடன் 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இருப்பினும் அதை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளேஸிஸ் தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் ரஜத் படிடார் 52, வில் ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்தும் கடைசியில் 20 ஓவரில் 221 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் கரண் சர்மா 3 சிக்சருடன் 20 (7) ரன்கள் போராடியும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

நல்லா பாருங்க:
ஆனால் அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி லோ ஃபுல் டாஸ் பீமர் பந்தில் அவுட்டானது சர்ச்சையாக அமைந்தது. குறிப்பாக நோபால் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அந்தப் பந்தை அடித்த விராட் கோலி கேட்ச் கொடுத்தார். இருப்பினும் அதை நோபால் வழங்காத அம்பயர்கள் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்த விராட் கோலியின் இடுப்புக்கு கீழே பந்து வந்ததால் அவுட் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் அதே போட்டியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வீசிய 17வது ஓவரின் 5வது பந்தில் பெங்களூரு வீரர் பிரபுதேசாய் அதிரடியான சிக்ஸர் அடித்தார். அந்தப் பந்து முதல் பார்வையில் பார்க்கும் போது பவுண்டரி எல்லையை பாண்டி விழுவது போன்றே தெரிந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நடுவர்கள் 3வது நடுவரின் உதவியையும் நாடாமல் சிக்சருக்கு பதிலாக பவுண்டரி என்று அறிவித்தனர்.

- Advertisement -

மறுபுறம் போட்டி நடந்த வேகத்தில் ஒளிபரப்பு நிறுவனம் அதை ரிப்ளையில் காண்பிக்க தவறியது. ஆனால் கடைசியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது. எனவே அந்த இடத்தில் 4 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் கொடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம் என்று தற்போது ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அந்த குறிப்பிட்ட பந்தின் வீடியோவை கையிலெடுத்துள்ள ஆர்சிபி ரசிகர்கள் அதை பெரிதாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு “நன்றாக பாருங்கள் இது சிக்ஸர்” என்று அம்பயர்களை ஆதாரத்துடன் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: தோனி, ரோஹித் சர்மாவிற்கு அடுத்து 3 ஆவது வீரராக ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்துள்ள சாதனை – விவரம் இதோ

ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் ரிப்ளையில் பார்க்காமல் 3வது நடுவரிடம் வாக்கி டாக்கியில் “அது சிக்ஸர் கிடையாது” என்பதை பேசி உறுதி செய்த பின்பே பவுண்டரி வழங்கியதால் உண்மை தெரியாமல் பேச வேண்டாமென கொல்கத்தா ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். மொத்தத்தில் இதையும் சேர்த்து 7வது தோல்வியை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி இந்த வருடமும் கோப்பையை வெல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement