தோனி, ரோஹித் சர்மாவிற்கு அடுத்து 3 ஆவது வீரராக ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் படைத்துள்ள சாதனை – விவரம் இதோ

Karthik
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் நேற்று ஏப்ரல் 21-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்றது. அதில் முதலாவதாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிக்கும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி கடைசி வரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததோடு சேர்த்து பெங்களூரு அணியின் கையில் இருந்த வெற்றியை கோட்டை விடுவதற்கு காரணமாகவும் அமைந்தார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இது அவுட்டா? லைனை மாற்றி வரைங்க.. விராட் கோலி தீர்ப்பு பற்றி சித்து, ஏபி டீவில்லியர்ஸ் அதிருப்தி

அந்த வகையில் இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களாக தோனி (256 போட்டிகள்), ரோகித் சர்மா (250 போட்டிகள்)ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் மூன்றாவது வீரராக தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் 250 போட்டிகளில் விளையாடி சாதனை நிகழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி 245 போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement