இது அவுட்டா? லைனை மாற்றி வரைங்க.. விராட் கோலி தீர்ப்பு பற்றி சித்து, ஏபி டீவில்லியர்ஸ் அதிருப்தி

Sidhu and ABD
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூருவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50, பில் சால்ட் 48 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த பெங்களூருவுக்கு ரஜத் படிடார் 52, வில் ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறியதால் பரிதாபமாக தோற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல் டாஸ் பந்தில் விராட் கோலி அவுட்டான விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதெல்லாம் அவுட்டா:
குறிப்பாக அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்ததால் நோபால் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் விராட் கோலி அடித்து கேட்ச் கொடுத்தார். இருப்பினும் அதற்கு நடுவர்கள் அவுட் வழங்கியதை தொடர்ந்து விராட் கோலி எடுத்தார். ஆனால் அதை சோதித்த போது வெள்ளைக் கோட்டுக்கு வெளியே இருந்த விராட் கோலியின் இடுப்பின் உயர்த்தை (1.04) விட பந்தின் உயரம் (0.92 மீட்டர்) குறைவாக இருப்பதை நடுவர் கண்டறிந்தார்.

எனவே விராட் கோலி அவுட் என்று மீண்டும் 3வது நடுவர் மைக்கேல் கௌ அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது அவுட் கிடையாது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து ஸ்டார் இது பற்றி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை நீங்கள் பீமர் பந்தில் அவுட்டாக்கி விட்டு என்னை வரவேற்குமாறு சொன்னால் கண்டிப்பாக செய்ய மாட்டேன்”

- Advertisement -

“அவர் அவுட் கிடையாது. இது கிரிக்கெட்டின் நேர்மைதன்மைக்கு உகந்தது கிடையாது. ஒருவேளை அடிப்படை விதிமுறை மோசமாக இருந்தால் அதை நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறினார். இதே தீர்ப்பை பற்றி ஏபிடி வில்லியர்ஸ் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “விளையாட்டில் இது போன்ற முடிவுகள் கோபம் மற்றும் குழப்பத்திற்கான இடத்தை திறக்கின்றன”

இதையும் படிங்க: யூஸ்லெஸ் பிளேயர் நானா இருந்தா அவர வாங்கிருக்கவே மாட்டேன்.. பஞ்சாப் வீரரை விளாசிய சேவாக்

“இதை சரி செய்வது கடினமானதல்ல. பேட்ஸ்மேன் எங்கே நிற்கிறார் என்ற நிலையை பெறவும். பின்னர் அதற்கு தகுந்தார் போல் லைனை வரைந்து பால் ட்ரேக்கிங்கை பயன்படுத்தவும். இதைச் செய்தால் எந்த குழப்பமும் ஏற்படாது” என்று கூறியுள்ளார். அதாவது வெள்ளைக்கோட்டை பார்க்காமல் பேட்ஸ்மேன் எங்கே எங்கே நிற்கிறார் என்பதை மையமாக வைத்து இடுப்பின் உயரத்தை அளந்து தீர்ப்பளித்தால் இந்த குழப்பமே வராது என்று டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Advertisement