யூஸ்லெஸ் பிளேயர் நானா இருந்தா அவர வாங்கிருக்கவே மாட்டேன்.. பஞ்சாப் வீரரை விளாசிய சேவாக்

Virender Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் சுமாராக விளையாடி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிசோர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன்பின் 143 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 35, சாய் சுதர்சன் 31, ராகுல் திவாட்டியா 36* ரன்கள் அடித்து 19.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

யூஸ்லெஸ் பிளேயர்:
அதனால் 8 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த பஞ்சாப் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருப்பதால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கடினமாகியுள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் சுமாராக விளையாடிய கேப்டன் ஷிகர் தவான் காயத்தால் கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக 18.50 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் கரண் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் கேப்டனானதும் அசுடோஸ் சர்மா, சசாங் சிங் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை விட்டுவிட்டு தாமே ஓப்பனிங்கில் களமிறங்கும் அவர் இதுவரை பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் சாம் கரண் உபயோகமற்ற வீரர் என்று கடுமையாக விமர்சித்துள்ள வீரேந்திர சேவாக் தாமாக இருந்தால் அவரை பஞ்சாப் அணியில் வாங்கியிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் சேவாக் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்தால் அவரை எனது அணியில் கூட எடுத்திருக்க மாட்டேன். பேட்டிங் ஆல் ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல் ரவுண்டர் ஆகிய எந்த வேலைக்கும் அவரை எடுத்திருக்க மாட்டேன். கொஞ்சமாக மட்டும் பந்து வீசி பேட்டிங் செய்யும் அவரைப் போன்ற வீரரால் எந்த பயனுமில்லை. ஒன்று நீங்கள் நன்றாக பேட்டிங் செய்து எங்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: விராட் கோலிக்கு எதிரா அம்பயர்கள் பண்ணது நியாயமே இல்ல.. அவரு அவுட் கிடையாது – ஏ.பி.டி கருத்து

“அல்லது பந்து வீசி போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் எதையும் சரியாக செய்யாத அவரை போன்ற வீரரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார். சொல்லப்போனால் சாம் கரண் போன்ற வீரரை 18.5 கோடிகள் கொடுத்து வாங்கினால் மட்டும் பஞ்சாப் அணியால் கோப்பையை வென்று விட முடியாது என கடந்த வருடமே சேவாக் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement