ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்விகள் என 10 புள்ளிகள் உடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இனிவரும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு உறுதி என்பதனால் இனிவரும் ஆட்டங்கள் ஒவ்வொன்றும் சென்னை அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய சென்னை அணியில் பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சு துறையில் சற்று சொதப்பல் நடைபெற்று வருகிறது. மேலும் முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது சென்னை அணிக்கு சிறிய பின்னடைவையும் தந்திருந்தது. கடந்த போட்டியின் போது :
துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அதேபோன்று ஒரு சில பந்துகளை வீசிய தீபக் சாஹரும் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியிருந்தார். மேலும் ஏற்கனவே சென்னை அணிக்காக தனி ஒருவராக மிகச் சிறப்பான செயல்பாட்டை வந்த பதிரானாவிற்கும் தசை பிடிப்பு ஏற்பட்டது.
இப்படி சென்னை அணியின் பவுலர்கள் அடுத்தடுத்து வெளியேற சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதோட கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அணியில் இருந்து விலகிய பதிரானா மற்றும் தீக்ஷனா ஆகியோர் இலங்கை சென்று டி20 உலக கோப்பை தொடருக்கான விசா மற்றும் பாஸ்போர்ட் நடமுறைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதனால் அவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் விசா நடைமுறைகளை முடித்துவிட்ட அவர்கள் இருவரும் தற்போது இலங்கையில் இருந்து இந்தியா திரும்பி டெல்லி வழியாக தரம்சாலாவிற்கு வந்துள்ளது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக மே 5-ம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்னர் அவர்கள் அணிக்கு திரும்பியிருப்பது தற்போது சென்னை அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது.
இதையும் படிங்க : டீ குடிச்சுட்டு வரதுக்குள்ள 92/0 டூ 117/6ன்னு ஆகிடுச்சு.. ஆர்சிபி ஜெயிக்க அவங்க தான் காரணம்.. டிகே பேட்டி
குறிப்பாக மதீஷா பதிரானா இந்த தொடர் முழுவதுமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் நிச்சயம் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.