விராட் கோலிக்கு எதிரா அம்பயர்கள் பண்ணது நியாயமே இல்ல.. அவரு அவுட் கிடையாது – ஏ.பி.டி கருத்து

ABD
- Advertisement -

ஏப்ரல் 21-ஆம் தேதியான நேற்று நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் முதலாவதாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் கடைசி ஓவரின் போது ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்து இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20
ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்திருந்த வேளையில் அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரரான விராட் கோலி 6 பந்துகளை சந்தித்து இரண்டு சிக்ஸர்களுடன் 18 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை அளித்த வேளையில் தொடர்ந்து விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாவது ஓவரின் முதல் பந்தினை சந்தித்த விராட் கோலி ஹர்சித் ராணா பந்துவீச்சில் காட் அண்ட் போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார்.

அதிலும் குறிப்பாக அந்த பந்து புல்டாஸாக கோலியின் நெஞ்சுக்கு வந்தது. அதனை சற்றும் எதிர்பாராத விராட் கோலி அந்த பந்தினை தடுக்க நினைத்து அந்த பந்து ஹர்ஷித் ராணாவிடம் சென்று கேட்ச் ஆனது. அதனை கண்ட அனைவரும் நோபால் என்றே நினைத்து இருப்பார்கள். ஆனால் அதனை சரிபார்க்க மூன்றாவது நடுவர் விராட் கோலி கிரீசுக்கு வெளியே நின்று இருந்ததால் பந்து உயரமாக வந்ததாகவும், கிரீஸிற்குள் நின்று விளையாடியிருந்தால் இடுப்புக்கு கீழ் தான் வந்திருக்கும் என்று கூறி அவுட் கொடுத்துவிட்டார்.

- Advertisement -

இதனை சற்றும் எதிர்பாராத விராட் கோலி அதிருப்தியுடன் அம்பயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதோடு போட்டி முடிந்த பின்னர் கூட அம்பயர்களுடன் விராட் கோலி அந்த முடிவு குறித்து விவாதித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை அளித்துள்ள ஏ பி டி வில்லியர்ஸ் குறிப்பிடுகையில் : இது நடுவரின் தவறு கிடையாது. ஆனாலும் இந்த விக்கெட் கொடுக்கப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் நாங்கள் அடைந்த தோல்விக்கு அந்த 3 பேர் தான் காரணம் – சாம் கரண் வருத்தம்

நாம் தொழில்நுட்பத்தை காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டும். ஃபுட்பாலில் கோடுகள் வரைந்து பயன்படுத்துவது போல விராட் கோலி நின்றிருக்கும் இடத்தில் பந்தை அவர் எவ்வாறு சந்தித்தாரோ அதை வைத்து அளவிட வேண்டும். பந்து கிரீஸிற்கு செல்லும்போது எவ்வளவு உயரத்தில் இருந்திருக்கும் என்றெல்லாம் பார்த்திருக்கக் கூடாது. என்னை பொறுத்தவரை இந்த விக்கெட் நியாயம் அல்ல என ஏ.பி.டி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement