குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் நாங்கள் அடைந்த தோல்விக்கு அந்த 3 பேர் தான் காரணம் – சாம் கரண் வருத்தம்

Curran
- Advertisement -

சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களது சொந்த மண்ணில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தை அளித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களையும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களையும் குவித்தனர். குஜராத் அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவாதியா 36 ரன்களையும், சுப்மன் கில் 35 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக நினைக்கிறேன். இருந்தாலும் பந்து வீச்சில் எங்களுடைய முயற்சி மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

கடைசி வரை எங்களது அணியின் வீரர்கள் எந்த இடத்திலும் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆனாலும் இறுதியில் அது பத்தாமல் போனது. குஜராத் அணி சார்பாக ரஷீத் கான் மற்றும் நூர் அஹமது ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதோடு சாய் கிஷோரும் சிறப்பாக பந்து வீசியதால் எங்களை அவர்கள் பெரிய ரன்களை அடிக்க விடாமல் தடுத்து விட்டனர். அவர்களுக்கு கிரெடிட் கொடுத்தே ஆக வேண்டும்.

இதையும் படிங்க : 207 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த சேப்மேன்.. வலுவான பாகிஸ்தானை அசால்ட்டாக டீல் செய்த இளம் நியூஸிலாந்து அணி

மூன்றாவது முறையாக இந்த மைதானம் பயன்படுத்தப்படுவதால் 160 ரன்களுக்கு மேல் அடித்தாலே அது வெற்றிக்கு போதுமானதாக இருந்திருக்கும். பிரப்சிம்ரன் சிங் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது இந்த போட்டியில் பெரியளவில் ரன் குவிக்க முடியாமல் போனதற்கும், தோல்விக்கு காரணமாகவும் மாறியது என சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement