207 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்த சேப்மேன்.. வலுவான பாகிஸ்தானை அசால்ட்டாக டீல் செய்த இளம் நியூஸிலாந்து அணி

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. 2024 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்தத் தொடரில் பாபர் அசாம் மீண்டும் பாகிஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் நீண்ட நாட்கள் கழித்து முகமது அமீர் விளையாட வந்துள்ளார். அந்த வகையில் இத்தொடரில் முழு பலத்துடன் கூடிய பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

மறுபுறம் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா, ட்ரெண்ட் போல்ட் போன்ற முதன்மை நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர். எனவே இந்த தொடரில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் துவங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் பாகிஸ்தான் வென்று முன்னிலை பெற்றது.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:
அதைத்தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஏப்ரல் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 178/4 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 32, பாபர் அசாம் 37, இர்பான் கான் 30*, சடாப் கான் 41 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக இஷ் சோதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு துவக்க வீரர்கள் டிம் ராபின்சன் 28, டிம் சைபர்ட் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 53/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த டீன் பாக்ஸ்போர்ட் – மார்க் சேப்மேன் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

அந்த வகையில் 18 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 117 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்த ஜோடியில் தடுமாற்றமாகவே விளையாடிய டீன் பாக்ஸ்போர்ட் 31 (29) ரன்களில் அவுட்டானார். ஆனால் எதிர்புறம் அட்டகாசமாக விளையாடிய மார்க் சேப்மேன் கடைசி வரை அவுட்டாகாமல் அரை சதமடித்து 9 பவுண்டரி 4 சிக்சருடன் 87* (42) ரன்களை 207.14 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார்.

இதையும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் மகிழ்ச்சி

அதனால் 18.2 ஓவரிலேயே 179/3 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று 1 – 1* (5) கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. குறிப்பாக வலுவான பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் இரண்டாவது தர இளம் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி கண்டது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement