பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் மகிழ்ச்சி

Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்கவீரர் பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களையும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ராகுல் திவாதியா 36 ரன்களையும், சுப்மன் கில் 35 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்த போட்டியின் போது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : திருப்பி கொடுக்கவேண்டிய நேரத்திற்கு வந்த சி.எஸ்.கே அணி.. சென்னை வந்தடைந்த வீரர்கள் – நாளைக்கு தான் சம்பவம்

நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். கேப்டன்சி பற்றி பேட்டிங் செய்யும் போது அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement