திருப்பி கொடுக்கவேண்டிய நேரத்திற்கு வந்த சி.எஸ்.கே அணி.. சென்னை வந்தடைந்த வீரர்கள் – நாளைக்கு தான் சம்பவம்

CSK-vs-LSG
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது சரியாக ஒரு மாதத்தை பூர்த்தி செய்து தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 37-லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஒவ்வொரு அணியுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக ஒவ்வொரு போட்டியிலும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சுவாரசியத்தை அளித்து வருகிறது. அதோடு ஒவ்வொரு போட்டியும் கடைசி பந்து வரை சென்று ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தொடரில் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை சி.எஸ்.கே அணி 7 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால் கடைசியாக ஏப்ரல் 19-ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியின் போது முதலில் விளையாடியிருந்த சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது லக்னோ அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக மீண்டும் ஒரு வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த தொடரில் நாளை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் 39-வது லீக் போட்டியில் சென்னை அணி லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் பெரிய சம்பவத்தை செய்ய சிஎஸ்கே அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க : டி20 வேர்லடுகப் வர நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.. ஒரே தவறால் வாய்ப்பை இழந்த – தினேஷ் கார்த்திக்

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் சி.எஸ்.கே அணி நாளைய போட்டியிலும் நிச்சயம் லக்னோ அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தி அந்த வெற்றியை தொடர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement