டி20 வேர்லடுகப் வர நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.. ஒரே தவறால் வாய்ப்பை இழந்த – தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்படுவதோடு மட்டுமின்றி பின் வரிசையில் பினிஷராக களமிறங்கி ஆர்சிபி அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வழங்கி வந்தார். மேலும் அவரது ஆட்டம் போட்டிக்கு போட்டி மெருகேறிக்கொண்ட வந்தது.

இதன்காரணமாக அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவரை சேர்க்க வேண்டும் என கடைசி சில போட்டிகளின் போது பல்வேறு நிபுணர்களும், ரசிகர்களும் வலியுறுத்தி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஏப்ரல் 21-ஆம் தேதி நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் கடைசி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டபோது தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்ததால் நிச்சயம் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 19-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த தினேஷ் கார்த்திக் அந்த ஓவரின் மற்ற 3 பந்துகளில் சிங்கிள் எதுவும் போடாமல் கடைசி பந்தில் அழுத்தம் காரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் இருபதாவது ஓவரின் போது வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் கரண் சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசியும் கடைசி பந்தில் பெங்களூரு அணி மூன்று ரன்கள் அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஒருவேளை 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும். மகத்தான பினிஷரான தினேஷ் கார்த்திக் எளிதாக வெற்றியை பெற்று தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 19-வது ஓவரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு பினிஷிங் செய்ய முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்ததார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் ஆர்சிபி தோல்விக்கு காரணமான டிகே’வை 2024 டி20 உ.கோப்பைக்கு செலக்ட் பண்ணிடாதீங்க.. ரசிகர்கள் அதிருப்தி

இதன்காரணமாக அவரது டி20 உலக கோப்பை இடமானது தற்போது பறிபோகவுள்ளது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற வேண்டுமெனில் கீப்பர் மற்றும் பினிஷராகவே விளையாட முடியும் என்கிற வேளையில் தற்போது கையில் இருந்த போட்டியை முடித்துக் கொடுக்க முடியாமல் தினேஷ் கார்த்திக் வெளியேறியது அவரது இடத்தையே பறிக்கும் அளவிற்கு ஆபத்தாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement