ப்ளீஸ் ஆர்சிபி தோல்விக்கு காரணமான டிகே’வை 2024 டி20 உ.கோப்பைக்கு செலக்ட் பண்ணிடாதீங்க.. ரசிகர்கள் அதிருப்தி

Dinesh Karthik 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூருவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா ஸ்ரேயாஸ் ஐயர் 50, பில் சால்ட் 48 ரன்கள் எடுத்த உதவியுடன் 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பெங்களூருக்கு விராட் கோலி 18, கேப்டன் டு பிளேஸிஸ் 7, க்ரீன் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ரஜத் படிதார் 55, வில் ஜேக்ஸ் 52 ரன்கள் அதிரடியாக எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்கள். ஆனால் கடைசியில் பிரபுதேசாய் 24, மஹிபால் லோம்ரர் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தாலும் நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
இருப்பினும் கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்ப்புறமிருந்த கரண் சர்மாவுக்கு பேட்டிங் தெரியாது என்று கருதிய தினேஷ் கார்த்திக் முதலிரண்டு போட்டியில் சிங்கிள் கிடைத்தும் வேண்டுமென்றே எடுக்கவில்லை. மேலும் 3வது பந்தில் சிக்சர் அடித்த அவர் 4வது பந்தில் சிங்கள எடுக்காமல் 5வது பந்தில் பவுண்டரி அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் கடைசியில் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக 3 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட கரன் சர்மா 20 (7) ரன்கள் விளாசி அவுட்டானார். அதனால் ஒருவேளை அந்த 3 பந்துகளில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்திருந்தால் கண்டிப்பாக பெங்களூரு 1 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்காது என்றே சொல்லலாம். எனவே பெங்களூருவின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

முன்னதாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2022 சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய அவர் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி நேரத்தில் சுமாராக விளையாடிய விராட் கோலியின் போராட்டத்தை கிட்டத்தட்ட வீணடித்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 120% கொடுக்கிறேன்.. கில் இல்ல.. அவர் தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு.. சாய் கிஷோர் பேட்டி

நல்லவேளையாக அன்றைய நாளில் அஸ்வின் சாதுரியமாக செயல்பட்டு அந்தத் தவறை சரி செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதே போல 2024 ஐபிஎல் தொடரில் 251* ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திக் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கு லேசான வாய்ப்புகள் காணப்படுகிறது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியை போல எப்போதும் அழுத்தமான நேரத்தில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள தினேஷ் கார்த்திக்கை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement