120% கொடுக்கிறேன்.. கில் இல்ல.. அவர் தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காரு.. சாய் கிஷோர் பேட்டி

Sai Kishore 2
- Advertisement -

ஐபிஎல் 2024 சீசனில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் சுமாராக விளையாடி 20 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 29, பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிசோர் 4, நூர் அஹ்மத் 2, மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 143 ரன்களை சேசிங் செய்த குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 35, தமிழக வீரர் சாய் சுதர்சன் 31, ராகுல் திவாடியா 36* (18) ரன்கள் அடித்து 19.1 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

சுதந்திரமான வாய்ப்பு:
இதையும் சேர்த்து 4வது வெற்றியை பதிவு செய்த குஜராத் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் தொடர்ந்து 9வது இடத்தில் தவிக்கிறது. குஜராத்தின் இந்த வெற்றிக்கு 33 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் குஜராத் அணிக்காக ரசித் கானுக்கு பின் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது ஸ்பின்னர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இந்நிலையில் தம்முடைய அணிக்காக எப்போதும் 120% பங்களிப்பை கொடுத்து வருவதாக தெரிவிக்கும் சாய் கிஷோர் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா தமக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய அணிக்காக எனது 120% பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். 20 – 25 நாட்கள் கழித்து மீண்டும் விளையாடுகிறேன். எனவே களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் விளையாடி என்னுடைய அனைத்தையும் அணிக்கு கொடுத்த விரும்பினேன். ஆசிஷ் நெஹ்ராரா எங்களுடைய அணியில் பயமின்றி விளையாடக்கூடிய அழகான சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். மகிழ்ச்சியுடன் விளையாடுமாறு சொன்ன அவர் எனக்கு நிறைய சுதந்திரத்தை கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: 1 ரன் வித்தியாசத்தில் தோத்தது மட்டுமல்ல.. மொத்த கதையும் முடிஞ்சி போச்சி – பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பெங்களூரு

“பிட்ச்சில் கொஞ்சம் வேகத்தை மாற்றுவோம் என்று நினைத்து செயல்பட்டேன். அது எனக்கு அழகாக வேலை செய்தது. எங்கள் அணியில் இன்று அசத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். திவாடியா மீண்டும் ஒரு முறை அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். ரசித் கான், நூர் அகமது ஆகியோரும் அழகாக பந்து வீசினார்கள். இது எங்கள் அணியின் மொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியகும்” என்று கூறினார்.

Advertisement