1 ரன் வித்தியாசத்தில் தோத்தது மட்டுமல்ல.. மொத்த கதையும் முடிஞ்சி போச்சி – பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பெங்களூரு

RCB
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது ஏப்ரல் 21-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்து அசத்தியது.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பிலிப் சால்ட் 48 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் குவித்தது.

இதன் காரணமாக பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக பெங்களூர் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருந்த வேளையில் இன்று நடைபெற்ற இந்த எட்டாவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இதன்காரணமாக மொத்தம் ஏழு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. இன்னும் பெங்களூரு அணிக்கு 6 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இனிவரும் ஆறு போட்டிகளில் பெரிய அளவில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறுவது கடினம் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : 142 ரன்ஸ்.. திவாடியா ஃபினிஷிங்.. 3 தமிழக வீரர்களுடன் பஞ்சாப்பை சாய்த்த குஜராத்.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

இதன் காரணமாக தற்போது ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் பரிதாப நிலைக்கும் பெங்களூரு அணி தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement