ஆசிய கோப்பை 2023 : போன போகட்டும் விடுங்க, அவர் டீம்ல இருக்க தகுதியற்றவர் – நட்சத்திர இந்திய வீரர் பற்றி கனேரியா பேட்டி

Danish Kaneria INDia
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையின் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2013க்குப்பின் 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை வரும் அக்டோபர் 5 முதல் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை வென்று நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் வரும் ஆகஸ்ட் 30 முதல் 2023 கோப்பை பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Asia Cup INDIA

- Advertisement -

அதில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இருப்பினும் அந்த அணியில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக திலக் வர்மாவும் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போகட்டும் விடுங்க:
அதே போலவே மணிக்கட்டு ஸ்பின்னரான யுஸ்வேந்திர சஹால் கழற்றி விடப்பட்டதற்கும் மதன் லால், கங்குலி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 2016இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 உலகக்கோப்பையில் விளையாடிய அவர் அஸ்வினை பின்னுக்குத் தள்ளி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.

Yuzvendra-Chahal-1

இருப்பினும் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்தார். ஆனால் அஸ்வின் இருந்ததால் 2022 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு பெறாத அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய காரணத்தால் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் குல்தீப், அக்சர் படேல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாக அவருக்கு உலகக் கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் யாராவது காயமடையும் பட்சத்தில் நிச்சயமாக அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கங்குலி, ஹர்பஜன் போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாகவே ரன்களை வாரி வழங்கி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறும் சஹால் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா அதிரடியாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Kaneria

இதையும் படிங்க:உலகக்கோப்பை 2023 : சஞ்சய் பாங்கர் தேர்வு செய்து வெளியிட்ட இந்திய அணி இதுதான் – லிஸ்ட் இதோ

“தற்சமயத்தில் யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தகுதியற்றவராக இருக்கிறார். ஏனெனில் சமீப காலங்களில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படவில்லை. மறுபுறம் குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து மிடில் ஓவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால் சஹாலுக்கு பதில் குல்தீப்பை தேர்வு செய்து தேர்வு குழுவினர் சரியான முடிவையே எடுத்துள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement