உலகக்கோப்பை 2023 : சஞ்சய் பாங்கர் தேர்வு செய்து வெளியிட்ட இந்திய அணி இதுதான் – லிஸ்ட் இதோ

Sanjay-Bangar
- Advertisement -

எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது துவங்க இன்னும் சிறிய இடைவெளியே உள்ள வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த உலக கோப்பை தொடரில் அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தனது அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி அவர் வெளியிட்டுள்ள அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை சேர்த்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி அவர் வெளியிட்டுள்ள இந்த உலகக் கோப்பை அணியில் 5 ப்ராப்பர் பேட்ஸ்மேன்களும், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் இடம்பிடித்துள்ளனர்.

அதோடு இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களும், ஒரே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும், ஒரு முதன்மை சுழற்பந்து வீச்சாளரும், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர். அதன்படி அவர் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களாக : ரோகித் சர்மா, சுமங்கில் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Arshdeep Singh

மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக ஹார்டிக் பாண்டியாவும், இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் இடம் பிடித்தனர். மேலும் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

நான்கு வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ், ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் வெளியிட்டுள்ள இந்த அணியானது தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி சஞ்சய் பாங்கர் வெளியிட்ட இந்திய அணியின் உலகக் கோப்பை அணி இதோ :

இதையும் படிங்க : ஏங்க எல்லா நேரமும் உலக கோப்பை ஜெயிக்க முடியுமா? இந்திய அணிக்கு முன்னாள் ஜாம்பவான் கேப்டன் மெகா ஆதரவு

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) கே.எல் ராகுல், 7) இஷான் கிஷன், 8) ஹார்டிக் பாண்டியா, 9) ரவீந்திர ஜடேஜா, 10) அக்சர் படேல், 11) குல்தீப் யாதவ், 12) பும்ரா, 13) முகமது ஷமி, 14) முகமது சிராஜ், 15) அர்ஷ்தீப் சிங்

Advertisement