அவங்கள பாத்தாவது நாம திருந்தனும்.. அடுத்த உலகக் கோப்பையில் இதை மாத்துங்க.. ஹர்பஜன் அட்வைஸ்

Harbhajan Singh 7
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையான போட்டி காணப்படுகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த பெங்களூரு அதன் பின் தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்றது. அதனால் பிளே ஆஃப் செல்ல சென்னைக்கு எதிரான தங்களது கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி போன்ற இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. சொல்லப்போனால் மொயின் அலி, ஜோஸ் பட்லர் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக முன்கூட்டியே ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வழக்கம் போல ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு தான் உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.

- Advertisement -

ஹர்பஜன் அதிருப்தி:
ஆனால் கடந்த காலங்களில் இதே போல ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் 2021, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த வரிசையில் இம்முறையும் மே 26ஆம் தேதி ஐபிஎல் ஃபைனல் நடைபெறும் நிலையில் ஜூன் 2ஆம் தேதி டி20 உலகக் கோப்பை துவங்க உள்ளது. அதனால் இம்முறையும் உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இம்முறையும் ஐபிஎல் தொடரின் அட்டவணை இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஹர்பஜன் சிங் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எனவே அடுத்த முறையாவது இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை பார்த்து இந்தியாவின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் தொடரின் அட்டவணையால் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அனைத்து இந்திய வீரர்களும் ஒன்றாக சேர்ந்து சில போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று நினைக்கிறேன். ஆம் உலகக் கோப்பைக்கு முன்பாக அமெரிக்காவில் இந்தியா சில பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இருப்பினும் நீங்கள் 4 – 5 போட்டிகளில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: அவரைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஆர்சிபி’க்காக என்ன சாதிச்சீங்க.. ஏபிடி’யை விளாசிய கம்பீர்

“குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக அமெரிக்காவில் விளையாடி நீங்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அது நடப்பது போல் தெரியவில்லை. எனவே தற்போதைக்கு கிடைக்க உள்ள 2 பயிற்சி போட்டியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் வருங்காலத்தில் உலகக் கோப்பை அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடருக்கு 10 – 15 நாட்கள் முன்பாக இந்திய அணியினர் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement