ஏங்க எல்லா நேரமும் உலக கோப்பை ஜெயிக்க முடியுமா? இந்திய அணிக்கு முன்னாள் ஜாம்பவான் கேப்டன் மெகா ஆதரவு

- Advertisement -

வரலாற்றின் 13வது ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இத்தொடர் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறுவது ஸ்பெஷல் அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே அதில் 2013க்குப்பின் பெரும்பாலும் வெளிநாடுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த பொன்னான வாய்ப்பையாவது பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது.

IND vs PAK World Cup

- Advertisement -

இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இன்னும் களமிறங்கி விளையாடாமல் இருப்பதும், டாப் ஆர்டரில் சொதப்பினால் அதை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு மிடில் ஆர்டர் வலுவாக இல்லாமல் இருப்பதும், மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருப்பதும் இந்திய அணியில் பின்னடைவை ஏற்படுத்தும் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதே போல அழுத்தமான போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்படுவதில் மாற்றமும் ஏற்படவில்லை என்பதை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி எதிரொலித்தது.

எல்லா நேரமும் முடியாது:
அதனால் இம்முறையும் சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லப்போவதில்லை என்று நிறைய இந்திய ரசிகர்களே நம்பிக்கையற்ற நிலையுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் அனைத்து நேரங்களிலும் உலகக்கோப்பை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஐசிசி தொடர்களில் போட்டி நாளன்று இந்திய அணி எப்படி செயல்படுகிறது என்பதை பொருத்தே வெற்றி தீர்மானிக்கப்படும் என நிதர்சனமாக பேசியுள்ளார்.

Asia Cup INDIA

குறிப்பாக அழுத்தமான போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்கும் அவர் ஆசிய கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட அணியில் இடம் பெறாத சஹால் இப்போதும் கம்பேக் கொடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அனைத்து நேரங்களிலும் உலகக் கோப்பையை வென்று விட முடியாது. சில நேரங்களில் மோசமான தருணங்களும் இடைவெளிகளும் இருக்கும்”

- Advertisement -

“இருப்பினும் வெற்றிக்கு அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை அதை அவர்கள் சரியாக செய்தால் வெற்றி காணலாம். உலகக்கோப்பை, ஆசிய கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடர் போன்ற அனைத்து தொடர்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் நிறைந்தது. இந்த அனைத்து தொடர்களின் வெற்றி என்பது குறிப்பிட்ட தருணத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. எனவே வலுவான அணியான இந்தியா உலகக் கோப்பையின் போது சிறப்பாக விளையாட வேண்டும்”

Sourav-Ganguly

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கான தன்னுடைய 11 பேர் இந்திய அணியை – வெளியிட்ட சஞ்சய் மஞ்ரேக்கர்

“மேலும் ஆசிய கோப்பை அணியில் சஹாலை விட சற்று பேட்டிங் அதிகமாக தெரிந்திருப்பதால் அக்சர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அது நல்ல தேர்வு என்று நினைக்கிறேன். இருப்பினும் எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் சஹால் இப்போதும் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் 17 பேர் கொண்ட இந்த அணியிலிருந்து உலக கோப்பையில் 2 பேர் ஏதோ ஒரு வகையில் வெளியே சென்றாக வேண்டும்” என்று கூறினார்.

Advertisement