ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கான தன்னுடைய 11 பேர் இந்திய அணியை – வெளியிட்ட சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு அதே கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா 8வது கோப்பையை வெல்வதற்காக தங்களுடைய 17 பேர் கொண்ட அணியை சமீபத்தில் அறிவித்தது. அதில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வாகியுள்ளது விக்கெட் கீப்பர் மற்றும் நம்பர் 4 பேட்டிங் இடத்திற்கான பிரச்சனையை தீர்த்துள்ளது.

Asia-Cup

- Advertisement -

அதே போல இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகாத திலக் வர்மா நேரடியாக தேர்வாகியுள்ள நிலையில் சுமாராக செயல்படும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சஹால் கழற்றி விடப்பட்டுள்ளதும் நிறைய விமர்சனங்களை ஏற்படுத்தின. இந்நிலையில் இத்தொடரில் இந்தியா தம்முடைய முதல் போட்டியில் செப்டம்பர் 2ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்கான தம்முடைய 11 பேர் கொண்ட அணியை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார்.

மஞ்ரேக்கர் லெவன்:
அதை தேர்வு செய்து அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் என்னுடைய 3 வேகப்பந்து வீச்சாளர்கள். ஹர்திக் பாண்டியா என்னுடைய 4வது வேகப்பந்து வீச்சாளர். ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் என்னுடைய அணியின் ஸ்பின்னர்கள். அதே போல என்னுடைய டாப் 3 பேட்ஸ்மேன்கள் ரோஹித், கில், விராட் கோலி ஆவார்கள். மேலும் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பதால் இடம் பிடிப்பார். அத்துடன் 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது திலக் வர்மா ஆகியோர் விளையாடுவார்கள்”

Tilak-Varma

“இது இந்தியாவின் முதன்மையான அணி என்பதால் டாப் 7 பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா உட்பட அனைவரும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். எனவே திலக் வர்மாவை இந்திய அணி மிடில் ஆர்டரில் பயன்படுத்தலாம். இது தான் தற்போதைய அணில் இருக்கும் ஒரே பிரச்சினையாகும்” என்று கூறினார். அதாவது சூழ்நிலைக்கேற்றார் போல் ஸ்ரேயாஸ் ஐயரை தாண்டி இடது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் திலக் வர்மாவை 11 பேர் அணியில் சேர்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மற்ற படி அனைத்து இடங்களிலும் விராட் கோலி நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் ஏற்கனவே சிறப்பாக விளையாடிய செட்டிலாகியுள்ளதால் பெரிய மாற்றங்களை செய்ய விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் ராகுல் காயத்திலிருந்து குணமடையாமல் போனால் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli Sanjay Manjrekar

இதையும் படிங்க:ஜேம்ஸ் ஆண்டர்சனின் எதிர்காலம் குறித்து மவுனம் கலைத்த ஸ்டூவர்ட் பிராட் – விவரம் இதோ

2023 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கான சஞ்சய் மஞ்ரேக்கரின் இந்திய 11 பேர் அணி இதோ:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்/திலக் வர்மா, கேஎல் ராகுல் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

Advertisement