விசாரணை தேவை… ஏதோ விஷயம் இருக்கு… கிரவுண்ட்ஸ் மேனுக்கு காச கொடுத்தாங்க… அர்ஜுனா ரணதுங்கா பரபரப்பு பேட்டி

Arjuna Ranatunga 3
Advertisement

பரபரப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குவதற்கு தயாராகி வருகிறது. குறிப்பாக அந்த தொடரில் பாகிஸ்தானை சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா மாபெரும் ஃபைனலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கையை ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சிராஜ் 50 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றி இந்தியாவுக்கு சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக தற்போது மழை காலம் என்பதால் இலங்கை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது.

- Advertisement -

பணத்தால் ஜெயிச்சுட்டாங்க:
இருப்பினும் அதையும் தாண்டி 5 ஆசிய கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதற்கு கண்டி மற்றும் கொழும்பு மைதான பராமரிப்பாளர்கள் தியாக வேலை செய்து மிகப்பெரிய உதவி செய்தார்கள் என்று சொல்லலாம். அதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்களின் பாராட்டுகளை அள்ளிய கொழும்பு மற்றும் கண்டி மைதான பராமரிப்பாளர்களுக்கு இத்தொடரை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக தொடரின் முடிவில் 50000 டாலர் பரிசுத்தொகையை ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.

அதை விட ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த 5000 டாலர் பரிசு தொகையையும் முகமது சிராஜ் அவர்களுக்கே வழங்கியது அனைவரது நெஞ்சை தொட்டது. இந்நிலையில் ஜெய் ஷா மற்றும் சிராஜ் ஆகியோர் இப்படி பரிசுத்தொகைகளை அள்ளிக் கொடுத்ததற்கும் இலங்கை 50 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்ததற்கும் சம்பந்தமிருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இதை ஊடகங்கள் விசாரிக்க வேண்டும் என்ற பரபரப்பான கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். இதற்கு முன் இந்தியா பலமுறை இலங்கைக்கு வந்துள்ளது. அதில் சில போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன. மைதான பராமரிப்பாளர்களின் உதவவியால் சில போட்டிகள் நடைபெற்றன. ஆனால் அவர்களுக்கு இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கொடுத்ததை வரலாற்றில் இதற்கு முன் நான் பார்த்ததில்லை. மேலும் பணத்தை யாருக்காவது கொடுத்தால் திருடாமல் இருந்தால் அது எனக்கு மிகவும் பிடிக்கும்”

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்ல நல்லா விளையாடணும்னா இதை மட்டும் பண்ணுங்க. சூரியகுமார் யாதவுக்கு அட்வைஸ் குடுத்த – ரவி சாஸ்திரி

“ஆனால் அதையும் தாண்டி ஆட்டநாயகன் விருது வென்றவர் அந்த பரிசுத் தொகையை தொடரின் முடிவில் மைதான ஊழியர்களுக்கு வழங்கினார். இருப்பினும் இதே மைதான ஊழியர்கள் பல வருடங்களாக கடினமாக உழைத்த போதும் இலங்கை வாரியம் கூட இவ்வளவு பெரிய தொகைகளை இயற்கையாக கொடுத்ததில்லை. எனவே இது போன்ற உண்மைகளை ஊடகங்கள் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement