ஜேம்ஸ் ஆண்டர்சனின் எதிர்காலம் குறித்து மவுனம் கலைத்த ஸ்டூவர்ட் பிராட் – விவரம் இதோ

Broad-and-Anderson
- Advertisement -

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராடு தனது நண்பரும், சக வீரருமான ஜேம்ஸ் ஆண்டர்சனின் எதிர்காலம் குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாகியும் வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஆசஷ் கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்து அணிக்காக இவர்கள் இருவரும் இணைந்து பல ஆண்டு காலமாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை திணறடித்துள்ளனர். ஸ்டூவர்ட் பிராடு ஓய்வு பெற்றதற்கு பிறகும் தற்போது ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரில் ஸ்டூவர்ட் பிராடு 22 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஆசஸ் தொடரில் நிகழ்த்தி இருந்தார். ஆனால் ஆண்டர்சன் நான்கு போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் ஆண்டர்சனின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள பிராடு கூறுகையில் : இன்னும் ஆண்டர்சன் சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது. அவருடைய பிட்னஸ் மற்றும் கிரிக்கெட் மீதான காதல் மிகவும் சிறப்பாகவே உள்ளது. தற்போது 690 விக்கெட்டுகள் வரை எடுத்துள்ள அவர் 700 விக்கெட்டுகளை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராகவும் திகழ்ந்து வருகிறார். அவரால் இன்னும் சில காலம் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்போது 41 வயதிலும் அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? விதிமுறையை மீறிய விராட் கோலியை எச்சரித்த பிசிசிஐ – மற்ற வீரர்களுக்கும் எச்சரிக்கை

உடல் அளவிலும் மனதளவிலும் அவர் போட்டிகளில் விளையாட தகுதியானவராகவே இருக்கிறார். அவரை போன்ற ஒரு வீரரின் அர்ப்பணிப்பு நிச்சயம் எதிர்வரும் இளம் வீரர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும் என ஆண்ட்ரசன் குறித்து பிராடு பேசியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 183 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 690 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement