இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? விதிமுறையை மீறிய விராட் கோலியை எச்சரித்த பிசிசிஐ – மற்ற வீரர்களுக்கும் எச்சரிக்கை

BCCI
- Advertisement -

பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெறப் போகும் 2023 ஆசிய கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி கட்டமாக தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் களமிறங்குவதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தை சந்தித்திருந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் குணமடைந்து தேர்வாகியுள்ளது இந்திய அணியை பலப்படுத்தியுள்ளது.

Asia Cup INDIA

- Advertisement -

இதை தொடர்ந்து இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்களுடைய உடல் தகுதியை நிரூபிக்கும் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சமீப காலங்களில் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் மீண்டும் மிகவும் கடினமான யோயோ டெஸ்ட் கட்டாயமாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது.

இதெல்லாம் குத்தமா:
அந்த நிலைமையில் கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமான அந்த யோயோ சோதனையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பங்கேற்று எளிதாக தேர்ச்சி பெற்றார். குறிப்பாக கடந்த பல வருடங்களாக உலகிலேயே ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அவர் இந்த யோயோ சோதனையில் 16.5க்கு 17.2 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலான புகைப்படத்தை பதிவிட்டு பகிர்ந்தார்.

Virat Kohli YOYO

அதைப் பார்த்த ரசிகர்கள் அவருடைய ஃபிட்னஸ் தரத்தை வியந்து பாராட்டியதுடன் ரோஹித் சர்மா போன்ற சுமாரான ஃபிட்னஸ் கடைபிடிக்கும் இதர வீரர்களும் தங்களுடைய யோயோ மதிப்பெண்களை பகிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இந்திய அணிக்குள் நடக்கும் முக்கிய தகவல்களை வெளியே சொல்லக்கூடாது என்பது பிசிசிஐ வைத்திருக்கும் ஒரு விதிமுறையாகும். அந்த வரிசையில் இந்த யோயோ டெஸ்டில் எடுக்கும் மதிப்பெண் பற்றிய தகவல்களை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கக் கூடாது என்ற கொள்கையையும் பிசிசிஐ கடைபிடித்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய யோயோ டெஸ்ட் ஸ்கோரை விராட் கோலி அந்த விதிமுறையை மீறியுள்ளதால் பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இது போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது என்ற விதிமுறை இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருக்கிறது. எனவே இனிமேல் அந்த விதிமுறையை மீறி இது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்று விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

BCCI

இதையும் படிங்க:எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கப்போவது இவர்தான் – ஜேக் காலிஸ் கருத்து

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி கூறியது பின்வருமாறு. “எந்த ஒரு ரகசியமான விஷயத்தையும் சமூக வலைதளங்களில் இடுகையிடுவதை தவிர்க்குமாறு வீரர்களுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயிற்சிகளை செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிடலாம். ஆனால் மதிப்பெண்களை பகிர்வது ஒப்பந்த விதிமுறையை மீறுவதற்கு வழி வகுக்கிறது” என்று கூறினார். அதே போல எச்சரிக்கை மற்ற வீரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் வெளிப்படையாக யோயோ ஸ்கோரை பகிர்ந்தது ஒரு குத்தமா என அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement