அண்டர்-19 ஆசிய கோப்பை 2023 : கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. ஒரே நாளில் இந்தியா – பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பரிதாபம்

U19 Asia CUP
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் துபாயில் நடைபெற்ற 2வது செமி ஃபைனலில் மோதின. டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.4 ஓவரில் வெறும் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக முஷீர் கான் 50, முருகன் அபிஷேக் 62 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மரூப் மிரிதா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கடைசி நேர ட்விஸ்ட்:
அதை தொடர்ந்து 189 ரன்களை துரத்திய வங்கதேசம் அணிக்கு ரஹ்மான் சிப்லி 7, ஜிஷன் ஆலம் 0, முகமத் ரிஸ்வான் 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இந்தியா போராடியது. ஆனால் இலக்கு குறைவாக இருந்ததால் மிடில் ஆர்டரில் ஆரிஃபுல் இஸ்லாம் 94 ரன்களும் அஹ்ரர் 44 ரன்களும் எடுத்ததால் 42.5 ஓவரிலேயே 189/6 ரன்கள் எடுத்த வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அதனால் இந்தியா சார்பில் அதிகபட்சமாக நமன் திவாரி 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் இப்போட்டியில் வென்ற வங்கதேசம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்து ஃபைனலுக்கு சென்றது. அந்த நிலைமையில் அதே நாளில் நடைபெற்ற மற்றொரு செமி ஃபைனலில் பாகிஸ்தான் மற்றும் அமீரக அணிகள் மோதின.

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் சுமாராக விளையாடி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆர்யன்ஷ் சர்மா 46, கேப்டன் அப்சல் கான் 55 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உபத் ஷா 4 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 194 என்ற எளிதான இலக்கை துரத்திய பாகிஸ்தானை அபாரமாக பந்து வீசி மடக்கிய அமீரக அணி 49.3 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதையும் படிங்க: ரோஹித்தின் கேப்டன் பதவி நீக்கத்தை கோலாகலமாக கொண்டாடும் சி.எஸ்.கே ரசிகர்கள் – விவரம் இதோ

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஐமான் அஹ்மத் 2, ஹர்டிக் பை 2 விக்கெட்களை எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாட் பைக் 50 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் பாகிஸ்தானை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய அமீரகம் சொந்த மண்ணில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் வங்கதேசத்தை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றது. மொத்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் அமீரகம் – வங்கதேச அணிகள் ட்விஸ்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement