ஆசிய கோப்பையில் தோற்றும் பாகிஸ்தான் தரவரிசையில் நம்பர் ஒன் அணியானது எப்படி? முதலிடத்திற்கு இந்தியா என்ன செய்யணும்

ICC Rankings 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. அதிலும் நடப்பு சாம்பியனாக இருந்த இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பந்து வீச்சில் அனலாக செயல்பட்டு 50 ரன்களுக்கு சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 8வது கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அதனால் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பைக்கு பின் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசை பட்டியலில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பாகவும் குழப்பமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -

நம்பர் ஒன் இடம்:
சொல்லப்போனால் இத்தொடரின் துவக்கத்தில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் 228 வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்ததால் 3வது இடத்திற்கு சரிந்தது. மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்றதால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை ஆஸ்திரேலியா தனதாக்கிய நிலையில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியது.

ஆனால் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா 3 – 2 (5) கணக்கில் தோல்வியை சந்தித்தது. அந்த 2 அம்சங்களும் பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறியதால் தரவரிசையில் 115 புள்ளிகளை பெற்று கூடுதல் ரேட்டிங் புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது.

- Advertisement -

அதே 115 புள்ளிகளை பெற்றாலும் சற்று குறைவான ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா தற்போது 2வது இடத்தில் இருக்கும் நிலையில் தென்னாபிரிக்காவிடம் தோற்ற ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் இந்தியா தரவரிசையில் பாகிஸ்தானை முந்தி உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறுவதற்கு பிரகாச வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிங்க: இதெல்லாம் இந்திய அணிக்கு தேவையில்லாத வேலை.. அப்றம் ரொம்ப வருத்தப்படாதீங்க.. பிசிசிஐ முடிவை எச்சரித்த வாசிம் அக்ரம்

அதே போல ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தி உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறும். மொத்தத்தில் 2023 உலக கோப்பைக்கு முன்பாக நம்பர் ஒன் இடத்திற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் போட்டியிடுகின்றன. அதில் உலகக்கோப்பைக்கு முன் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என்பதால் பாகிஸ்தானின் நம்பர் ஒன் இடம் ஏதேனும் ஒரு அணியிடம் பறிபோக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement