ரோஹித்தின் கேப்டன் பதவி நீக்கத்தை கோலாகலமாக கொண்டாடும் சி.எஸ்.கே ரசிகர்கள் – விவரம் இதோ

Rohit-and-MS
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த அணியின் புதிய கேப்டனாக ஹார்டிக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டிரேடிங்கில் குஜராத் அணியிடமிருந்து ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணி 15 கோடி ரூபாய் கொடுத்து டிரேடிங் செய்திருந்தது.

இந்நிலையில் இப்படி ஹார்டிக் பாண்டியா டிரேடிங் செய்யப்பட்டதற்கு காரணமே மும்பை அணியின் கேப்டனாக மாற்றப்படுவதற்கு தான் என்று பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்த வேளையில் இன்று அதனை உறுதிப்படுத்தும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹார்டிக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக அறிவித்தது.

- Advertisement -

அதோடு கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரோகித் சர்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமாக கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

அதேவேளையில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு வரை சென்னை அணியின் ஒரே கேப்டனாக எங்க தல தோனி மட்டுமே உள்ளார் என சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு சில போட்டிகளில் ஜடேஜா கேப்டனாக செயல்பட்டாலும் மீண்டும் தோனியே சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2023 உ.கோ கவலை இருந்துச்சு.. பிறந்தநாளில் என்னை விட அவர் தான் இந்தியாவுக்கு கிப்ட் கொடுத்தாரு.. குல்தீப் பேட்டி

ரோஹித் சர்மா இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதிவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகவும் வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

Advertisement