தோத்து போனாலும் கடைசி நேரத்தில் தோனியின் சிறப்பான பினிஷிங்கால் தப்பிய சி.எஸ்.கே – பிளேஆப் வாய்ப்பு இருக்கா?

Dhoni
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற பிரமாண்ட இலக்கினை துரத்தி 35 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களிடம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பிளே ஆப் வாய்ப்பை தற்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை இந்த தொடரில் 12 லீக் போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளை சந்தித்து 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் பாசிட்டிவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் எதிர்வரும் இரண்டு போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதும் பிரகாசமாகியுள்ளது. இதுவரை 6 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணி 12 புள்ளிகளை பெற்றிருந்த போதும் ரன் ரேட்டில் +0.491 என்கிற நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

குறிப்பாக மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணியை விட சென்னை அணியின் ரன் ரேட் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று சென்னை அணியுடன் 12 புள்ளிகளை பகிர்ந்து உள்ள டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகளின் ரன் ரேட் மைனஸில் இருக்கும் வேளையில் சென்னை அணியின் ரன்ரேட் ப்ளஸ்ஸில் உள்ளது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான கடந்த போட்டியில் 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தாலும் டேரல் மிட்சல், மொயின் அலி ஆகியோரது ஆட்டத்தால் நல்ல நிலையை எட்டியது. பின்னர் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் ரன்குவிப்பு வேகத்தில் தொய்வு ஏற்பட்டது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு காரணமே அவர்தான். அவரை பர்ஸ்ட் டீம்ல இருந்து தூக்குங்க – ரசிகர்கள் கொதிப்பு

அந்த நேரத்தில் பின் வரிசையில் களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி என 26 ரன்கள் குவித்து அதிரடியாக ரன்களை சேர்க்க சென்னை அணி 200 ரன்களை நெருங்கியது. இதன் காரணமாகவே தற்போது சென்னை அணியின் ரன் ரேட் பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement