2023 உ.கோ கவலை இருந்துச்சு.. பிறந்தநாளில் என்னை விட அவர் தான் இந்தியாவுக்கு கிப்ட் கொடுத்தாரு.. குல்தீப் பேட்டி

Kuldeep yadav Press.jpeg
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்துள்ளது. குறிப்பாக முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்காவை 3வது போட்டியில் தோற்கடித்த சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.

முன்னதாக ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் சூரியகுமார் 100, ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த தென்னாப்பிரிக்காவை 95க்கு சுருட்டி 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்து உதவினார்.

- Advertisement -

பர்த்டே ஹீரோ:
சொல்லப்போனால் தம்முடைய 29வது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிறந்த நாளன்று 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற தனித்துவமான உலக சாதனை படைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் தம்மை விட சூரியகுமார் யாதவ் தான் சதமடித்து பிறந்த நாளில் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக தெரிவிக்கும் குல்தீப் 2018 தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திலேயே இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து கொண்டது இப்போட்டியில் அசத்த உதவியதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூர்யா பாய் பேட்டிங் தான் உண்மையான பரிசு என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தது நன்றாக இருந்தது. ஏனெனில் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இல்லாமல் இருந்தது. மேலும் என்னுடைய பிறந்த நாளில் 5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்காததால் அது சிறந்த நாளாக அமைந்தது. இருப்பினும் அணி வெல்ல வேண்டும் என்று நான் விரும்பியதே முக்கியமாகும்”

- Advertisement -

“உலகக் கோப்பை தோல்விக்கு பின் முதல் 7 முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் தூங்கி எழுந்ததுமே உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்வி தான் நினைவுக்கு வந்து சோகத்தை கொடுத்தது. ஆனால் நகர்ந்து செல்லக்கூடிய இந்த வாழ்க்கையில் நீங்களும் நகர்ந்தாக வேண்டும். 2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் எனக்கு விளையாடுவதற்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. எனவே இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா மும்பை கேப்டனாக நீக்கப்பட்டது ஏன்? மகிளா ஜெயவர்தனே விளக்கம்

“கிரிக்கெட்டில் எப்போதுமே நீங்கள் விரும்பியது கிடைக்காது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கும் பாடங்களை வைத்து நீங்கள் வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement