ஆர்.சி.பி டீம் இப்படி பண்ணுவாங்கனு நான் நெனச்சி கூட பாக்கல – ஆதங்கத்தை பகிர்ந்த யுஸ்வேந்திர சாஹல்

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 61 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ள வேளையில் கடந்த 8 ஆண்டுக்களாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். பெங்களூர் அணிக்காக விளையாடிய காலத்தில் எப்போதுமே சிறந்த பந்து வீச்சாளராக இருந்த இவரை அந்த அணி மெகா ஏலத்திற்கு முன்னர் அணியில் தக்கவைக்காமல் வெளியேற்றியது.

Chahal

- Advertisement -

அதோடு மெகா ஏலத்தின் போதும் இவரை எடுப்பதில் ஆர்வம் காட்டாத ஆர்சிபி அணி அவரை தவற விட்டது. இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட 6.50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் பெங்களூரு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பெங்களூரு அணியுடன் உணர்வு ரீதியாக மிக நெருக்கமாக இருந்தேன். எட்டு ஆண்டுகளாக நான் அந்த அணிக்காக விளையாடியதால் என்னுள் எப்போதுமே பெங்களூரு அணி மீது நல்ல பற்று உள்ளது. வேறொரு அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

chahal 1

ஆனால் இந்த ஆண்டு நான் ஆர்சிபி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாட இருக்கிறேன். இப்படி ராஜஸ்தான் அணிக்காக நான் விளையாட செல்ல பணம் அதிகமாக கேட்டு அங்கு சென்று விட்டீர்களா ? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆர்சிபி என்னை தக்க வைப்பது குறித்து என்னிடம் கேட்கவும் இல்லை அது குறித்து பேசவும் இல்லை.

- Advertisement -

இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக என்னை அழைத்த ஆர்சிபி நிர்வாகம் : இந்த சீசனில் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய மூவரை மட்டுமே தக்க வைக்கிறோம் என்ற தகவலை மட்டும்தான் கூறினார்கள். அதை தவிர்த்து நீங்கள் அணியில் நீடிக்க விரும்புகிறீர்களா? அல்லது நாங்கள் உங்களை தக்க வைக்கட்டுமா? என்பது போன்ற எந்த ஒரு விருப்பத்தையும் என்னிடம் ஆர்சிபி அணி நிர்வாகம் கேட்கவில்லை.

இதையும் படிங்க : 205 ரன் அடிச்சும் நாங்க இப்படி தோக்க இதுதான் காரணம். நாங்க தப்பு பண்ணிட்டோம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

உண்மையில் நான் அவர்களிடம் பணம் கேட்கவில்லை என்னை தக்க வைக்க வேண்டும் என்றும் கூறவில்லை. இறுதியில் பெங்களூர் அணியில் இருந்து வெளியேறியது வருத்தம் தான். இருப்பினும் ஜெர்சியின் கலர் மட்டுமே மாறியுள்ளதே தவிர என்னுடைய ஆட்டத்திறன் எப்போதும் மாறாது தொடர்ச்சியாக நான் விக்கெட்டுகளை எடுப்பேன் என சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement