205 ரன் அடிச்சும் நாங்க இப்படி தோக்க இதுதான் காரணம். நாங்க தப்பு பண்ணிட்டோம் – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
Advertisement

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் ஐபிஎல் தொடரானது மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து அளித்தது என்றே கூறலாம்.

ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205 ரன்கள் குவிக்க 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பஞ்சாப் வீரர்கள் வெற்றிகரமாக அந்த ரன்களை 19 ஓவர்களின் முடிவிலேயே சேஸிங் செய்து அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் பாதியின் போது பிரகாசமாக இந்த வெற்றி வாய்ப்பை பெங்களூரு அணி இரண்டாவது பாதியில் கோட்டை விட்டது என்றே கூறலாம். இந்நிலையில் இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தனது வருத்தத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

இதுகுறித்து அவர் கூறுகையில் : 10 ரன்கள் இருக்கும்போது ஓடியன் ஸ்மித் கேச்சை தவறிவிட்டோம். அவர் உண்மையில் மிகச்சிறந்த வீரர். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது அவசியமான ஒன்று. அதனால் இதுபோன்ற கேட்சிகளை தவற விடும் போது போட்டியின் முடிவில் நிச்சயம் மாற்றம் இருக்கும். அந்த வகையில் கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது என டூபிளெஸ்ஸிஸ் கூறினார்.

- Advertisement -

தொடர்ந்து வெற்றி குறித்து பேசிய மாயங்க் அகர்வால் கூறுகையில் : இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றும் இந்த இரண்டு புள்ளிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருந்ததால் எங்களால் சேசிங் செய்து வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்க முடிந்தது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே கேப்டனாக மாறிய பிறகு ஜடேஜா இப்படி திணற காரணம் இதுதான் – முகமது கைப் ஓபன்டாக்

நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி அடுத்ததாக தங்களது இரண்டாவது போட்டியில் முப்பதாம் தேதி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement