சி.எஸ்.கே கேப்டனாக மாறிய பிறகு ஜடேஜா இப்படி திணற காரணம் இதுதான் – முகமது கைப் ஓபன்டாக்

Kaif
- Advertisement -

மும்பையில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மிகச் சிறப்பாக துவங்கியது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.

kkrvscsk

- Advertisement -

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திர சிங் தோனி போட்டிகள் ஆரம்பிக்கும் இரு தினங்களுக்கு முன்னர் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் வேளையில் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஜடேஜா தான் வருவார் என்று பலரும் கூறி வந்த நிலையில் தற்போது ஜடேஜா முழுநேர சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Jadeja

ஒருபுறம் தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. ஆனால் தான் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த ஜடேஜா மீது தற்போது சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஜடேஜாவின் இந்த சொதப்பலுக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில் :

- Advertisement -

ஜடேஜா பேட்டிங்கில் சமீப காலமாகவே மிக சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் கேப்டன் பதவி ஏற்றதும் முதல் போட்டியிலேயே அவர் பேட்டிங் மந்தமாக மாறியதற்கு. அதற்கு காரணம் அவர் மீது கேப்டன் பொறுப்பு கூடியுள்ளதால் சற்று பதட்டமாகவே இருந்தார். அந்த கேப்டன் பதவியினால் வந்த கூடுதல் அழுத்தம் காரணமாகவே அவரால் பழைய ஆட்டத்தை தர முடியாமல் போனது.

இதையும் படிங்க : தமிழக மாப்பிளையான கிளென் மேக்ஸ்வெல். சி.எஸ்.கே அளித்த ரியாக்ஷன் – வைரலாகும் பதிவு

எனினும் இனிவரும் போட்டிகளில் அவர் பழையபடி இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்ல முறையில் செயல்படுவார் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement