ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தார். அவர்களது இந்த பயணம் தற்போது திருமணம் செய்து தம்பதிகளாக மாறும் அளவிற்கு இனிமையாக மாறியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவர் உலகெங்கிலும் நடைபெற்று வரும் t20 லீக்களிலும் அசத்தி வருகிறார்.
மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த 15 வது ஐ.பி.எல் சீசனின் கேப்டனாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது திருமணம் காரணமாக அவர் இந்த தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை தவற விடுகிறார்.
மார்ச் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்காக முன்கூட்டியே மார்ச் 18-ஆம் தேதி தனது திருமணத்தை முடித்துக் கொண்டார். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வினி இராமன் என்பவரை காதலித்து வந்த மேக்ஸ்வெல் இப்போது அவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
அவர்களது திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்திய முறைப்படி நடைபெற்றது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பெரிய அளவில் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் இவர்களது திருமணம் சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.
அவர்கள் திருமணம் குறித்த சில புகைப்படங்களையும் வினி ராமன் அவரது சமூக வலைதளம் மூலமாகவும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் மேக்ஸ்வெல் தமிழக மாப்பிள்ளை ஆனதற்காக தற்போது சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லி அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. தொடரில் இருந்து வெளியேறவுள்ள – நட்சத்திர வீரர்
அப்படி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : மேக்ஸி சென்னை மாப்பிள்ளையா மாறிவிட்டீர்கள். திருமண வாழ்த்துக்கள் உங்களது ஜோடிக்கு எங்களது விசில்கள் என சி.எஸ்.கே நிர்வாகம் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.