டெல்லி அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. தொடரில் இருந்து வெளியேறவுள்ள – நட்சத்திர வீரர்

Dc
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் வீரர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு கடும் போட்டியை தந்து மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று மும்பை அணியை எதிர்த்து விளையாடிய டெல்லி அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

MI vs DC IPL 2022

- Advertisement -

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது டெல்லி அணி வெற்றிகரமாக இந்த தொடரை துவங்கியுள்ளது. அதேவேளையில் ஐந்து முறை ஐபிஎல் தொடரை வென்ற மும்பை அணியானது வழக்கம்போலவே தங்களது துவக்க போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறி வரும் சூழ்நிலை தற்போது டெல்லி அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் இந்த தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Marsh 1

ஏனெனில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கும் அவருக்கு அங்கு நடைபெற்ற பயிற்சியின்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அந்த தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக இந்தியா வரும் ஆஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்த அவர் தற்போது இந்த காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பது சிக்கல் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில் : ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்த பிறகுதான் முழு விவரம் தெரியும். மற்றபடி அவரது இடம் குறித்து இப்போது உறுதியாக எதையும் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உழைப்பே உயர்வு, ஃபிக்சிங் செய்தால் முன்னேறவே முடியாது – ஓபனாக பேசும் சோயப் அக்தர்

30 வயதான மிச்செல் மார்ஷ் 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு இந்த ஆண்டு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரே ஒரு போட்டி மட்டும் விளையாடிவிட்டு கணுக்கால் காயம் காரணமாக வெளியேறிய அவர் இந்த ஆண்டும் பங்கேற்காமல் போவார் என்று தகவல் வெளியாகி உள்ளதால் டெல்லி அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement