உண்மையிலே சொல்றேன். என்னோட பேட்டிங் கோச் இவர்தான் – சாஹலுடன் உரையாடிய சூரியகுமார் யாதவ்

Yuzi-and-SKY
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது முக்கியமான போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் லக்னோ மைதானத்தில் தன்மை மோசமாக இருந்ததனால் இந்திய அணியும் போராடி ஒரு வழியாக கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs NZ Hardik Pandya

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் 31 பந்துகளை சந்தித்து வெறும் 26 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்றிருருந்தார். வழக்கமாகவே களத்தில் இறங்கினால் 30 பந்துகளுக்கு 70 ரன்கள் அடிக்கும் அவர் இம்முறை இப்படி பொறுமையாக விளையாடியது மைதானம் எந்த அளவிற்கு கடினமாக இருந்தது என்பதையே வெளிக்காட்டியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த ஒரு உரையாடலில் கலந்து கொண்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் சூரியகுமார் யாதவிடம் பேட்டி கண்டனர். அப்போது குறிப்பாக எப்பொழுதுமே நகைச்சுவை செய்யும் குணமுடைய சாஹல் : நம்முடைய 360 டிகிரி பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் இன்று வித்தியாசமான ஒரு புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் இன்று களத்தில் நிதானமாக செயல்பட்டார்.

sky 1

சூர்யகுமார் யாதவின் இன்னொரு பக்கத்தை இந்த போட்டியில் நம்மால் பார்க்க முடிந்தது. நான் உங்களை பத்து வருடங்களாக பார்த்து வருகிறேன். நீங்கள் எப்போதுமே அதிரடியாக ஆடக்கூடியவர். ஆனால் இன்றைய போட்டியில் உங்களின் மனநிலை எப்படி இருந்தது? என சூர்யகுமார் யாதவிடம் சாஹல் கேள்வி ஒன்றினை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததுமே இறுதிவரை நான் களத்தில் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவிடமும் அதைத்தான் கூறினேன். இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்று கூறினார். உடனடியாக அவரை கலாய்த்த சாஹல் நான் உங்களுக்கு 370 டிகிரியில் பேட்டிங் செய்ய கற்றுக் கற்றுக் கொடுத்தேன். ஆனால் இந்த விக்கெட் வேறு மாதிரியாக இருந்ததது. ஒருவேளை நான் ரஞ்சிப் போட்டியில் விளையாடியதைப் பார்த்து இந்த ஆட்டத்தை கற்றுக் கொண்டாயா என்று விளையாட்டாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் கூறுகையில் : உண்மையிலேயே கடந்த தொடரில் நீங்கள் கற்றுக் கொடுத்ததை நான் மறக்கவில்லை.

இதையும் படிங்க : பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவை சாய்க்க சிட்னியில் மாஸ்டர் பிளான் போட்ட ஆஸ்திரேலியா – ரசிகர்கள் வியப்பு

நான் பேட்டிங்கில் எவ்வாறு முன்னேற்ற முன்னேற வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு தொடர்ச்சியாக கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களே தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள் இவர்தான் என்னுடைய பேட்டிங் கோச் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எங்கள் அண்ணன் தான் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறார் என சூரியகுமார் யாதவ் நகைச்சுவையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement