அக்சர் பட்டேலுக்கு பதிலா அவரையாச்சும் செலக்ட் பண்ணிருக்கலாம்.. அஸ்வின் தேர்வு பற்றி.. யுவராஜ் சிங் அதிருப்தி

Yuvraj Singh 5
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் படேல் காயத்தை சந்தித்து வெளியேறினார். மறுபுறம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர்.

அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (712) எடுத்த இந்திய ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்து 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்ற வெற்றிகளில் முக்கிய பங்காற்றி ஏராளமான அனுபவத்தை கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் தேர்வானார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி 4 விக்கெட்டுகளை சாய்த்து தன்னுடைய தரத்தை நிரூபித்த அவர் தற்போது அக்சர் படேலுக்கு பதிலாக உலகக்கோப்பை அணியிலும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

யுவராஜ் அதிருப்தி:
இந்த சூழ்நிலையில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை விட மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அக்சர் படேல் போலவே வாஷிங்டன் சுந்தர் லோயர் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக அசத்தக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக யுவராஜ் சிங் கருதுகிறார்.

அது போக அஸ்வின் போல ஆஃப் ஸ்பின்னராக இருப்பதன் காரணமாக இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அக்சர் படேல் இல்லாத இந்த சூழ்நிலையில் 7வது இடத்தில் யார் பேட்டிங் செய்யப் போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் என்னை பொறுத்த வரை அக்சர் பட்டேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் அது இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் இருப்பதற்கான வழியை உண்டாக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் யுஸ்வேந்திர சஹால் போலவே தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் மற்ற படி இந்த கலவையும் நன்றாகவே இருப்பதாக கருதுகிறேன்” என்று கூறினார். இருப்பினும் 2017இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் இதுவரை வெறும் 17 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க: உலககோப்பை தொடரில் சச்சின் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனை தகர்க்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

அந்தளவுக்கு அடிக்கடி காயத்தை சந்தித்து நிலையான இடத்தைப் பிடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் அஸ்வின் அளவுக்கு பெரிய அனுபவத்தை கொண்டிருக்கவில்லை. அந்த வகையில் அனுபவத்தின் அடிப்படையிலும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வின் முன்னுரிமை பெற்று தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement