உலககோப்பை தொடரில் சச்சின் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரது சாதனை தகர்க்க காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Rohit-Sachin-Gayle
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் “ஹிட்மேன்” என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு தோனி அவரை துவக்க வீரராக களம் இறக்கியதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா அண்மையில் 10000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தினார்

அதோடு இந்திய அணியின் கேப்டனாகவும் 12 ஆண்டுகள் கழித்து 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். ஏற்கனவே 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக உலககோப்பை தொடரில் விளையாடியிருந்த ரோகித் சர்மா தற்போது கேப்டனாக இந்த தொடரில் செயல்பட உள்ளார்.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா 2019-ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் இந்த தொடரில் முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் படைக்க இருக்கும் சாதனைகளாவது : இந்திய அணி சார்பாக உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை விளாசியவர் என்ற சாதனையை இதுவரை சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி ஆறு சதங்களை அவரது கரியரில் அடித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் 5 சதங்களை ஒரே தொடரில் அடித்தார்.

- Advertisement -

அதோடு ஒட்டுமொத்தமாக அவர் உலகக் கோப்பை தொடர்களில் ஆறு சதங்களை அடித்திருக்கும் வேளையில் எதிர்வரும் இந்த தொடரில் அவர் ஒரு சதம் அடித்தால் கூட சச்சின் டெண்டுல்கரின் அந்த மாபெரும் சாதனையை முறியடிப்பார். அதேபோன்று ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ரோகித் சர்மா 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 551 சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலுக்கு (553) அடுத்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : அரையிறுதி போட்டியில் மோதப்போகும் 4 அணிகள் இதுதான் – கிரிஸ் கெயில் கணிப்பு

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் மேலும் 3 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையில் அவர் முதலிடம் பிடிப்பார். இந்த இரண்டு சாதனைகளையும் அவர் நிச்சயம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியிலே படைப்பார் என்று நம்பலாம்.

Advertisement