உலகக்கோப்பை 2023 : அரையிறுதி போட்டியில் மோதப்போகும் 4 அணிகள் இதுதான் – கிரிஸ் கெயில் கணிப்பு

Gayle
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் சில தினங்களில் ஐசிசி-யின் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் துவங்க உள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ள இந்த மாபெரும் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் நகரில் விளையாட இருக்கின்றன.

அதனை தொடர்ந்து நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடரானது அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இந்நிலையில் தற்போதே இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அந்த நான்கு அணிகள் எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப்போகும் நான்கு அணிகள் குறித்த தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி கிரிஸ் கெயில் தேர்வு செய்துள்ள அந்த நான்கு அணிகளாவது : இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய அணி : சொந்த மண்ணில் விளையாடுவதால் ஏற்கனவே பலராலும் அரையிறுதி போட்டிக்கு செல்லும் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இந்திய அணியை அவர் தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் : இந்தியாவை தொடர்ந்து ஆசிய கண்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தானும் இம்முறை அரையிறுதிக்கு செல்லும் என்று அந்த அணியை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய வரலாற்றில் எத்தனை கேப்டன்கள் வந்தாலும்.. தோனியோட அந்த சாதனைக்கு யாராலும் ஈடாக முடியாது.. கம்பீர் நெகிழ்ச்சி பாராட்டு

இங்கிலாந்து : தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் அவர்கள் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வருவதாலும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணியாக இருப்பதாலும் அந்த அணியை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியா : எப்பொழுதுமே வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலிய அணி இம்முறையும் தங்களது பலத்தை காண்பிக்க முயலும் என்பதினால் அந்த அணியை அவர் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement