இந்திய வரலாற்றில் எத்தனை கேப்டன்கள் வந்தாலும்.. தோனியோட அந்த சாதனைக்கு யாராலும் ஈடாக முடியாது.. கம்பீர் நெகிழ்ச்சி பாராட்டு

Gautam Gambhir 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

முன்னதாக ராஞ்சியில் பிறந்து இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அணி வீரர்களை சிறப்பாக வழி நடத்தி 2007 டி20 உலக கோப்பையை வென்றார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸில் 2007 உலகக்கோப்பை படுதோல்விக்கு மருந்து போட்ட அவரது தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறு சாதனை படைத்தது.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அதை விட கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு வென்று கொடுத்த அவர் உலகிலேயே சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் என்ற முதல் அணியாக உலக சாதனை படைக்க உதவினர். அத்துடன் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், தவான் போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை உருவாக்கிய தோனி தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களுக்கு அப்போதே சீனியர் வீரர்களை கழற்றி விட்டு வாய்ப்பளித்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் எத்தனை கேப்டன்கள் இருந்தாலும் வந்தாலும் தோனியின் 3 உலகக்கோப்பைகள் வென்ற சாதனையை முறியடிக்க முடியாது என்று கெளதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் நிறைய கேப்டன்கள் வந்தனர். இனியும் வருவார்கள். ஆனால் தோனியின் கேப்டன்ஷிப்பையும் அவருடைய சாதனைகளையும் மற்ற யாராலும் பொருத்த முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் அவர் தன்னுடைய 3 ஐசிசி உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்”

இதையும் படிங்க: பயிற்சி போட்டியில் சதமடித்த பின்னர் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த – பாகிஸ்தான் வீரர் (பேட்டி இதோ)

“நீங்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கலாம். வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி வாகை சூடலாம். ஆனால் 2 உலகக்கோப்பை 1 சாம்பியன்ஸ் டிராபி என 3 உலகக் கோப்பைகளை வென்ற அவருடைய சாதனையை விட மற்றொரு பெரிய சாதனை படைக்க முடியாது” என்று கூறினார். முன்னதாக சமீப காலங்களாகவே தோனியை தொடர்ந்து விமர்சித்து வந்த அவர் இப்படி பாராட்டியுள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்கிறது.

Advertisement