பயிற்சி போட்டியில் சதமடித்த பின்னர் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த – பாகிஸ்தான் வீரர் (பேட்டி இதோ)

Rizwan
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 29-ஆம் தேதி மொத்தம் ஆறு அணிகளுக்கு இடையேயான மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் மழையால் பாதிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் இடையேயான பயிற்சி போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அந்த வகையில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் குவித்து அசத்தியது. பாகிஸ்தான அணி சார்பாக ரிஸ்வான் 103 ரன்கள் அடித்து ரிட்டயர் ஹர்ட் ஆனார். மேலும் பாபர் அசாம் 80 ரன்களும், சவுத் ஷாக்கில் 75 ரன்களும் குவித்து அசத்தினர்.

பின்னர் 346 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 43.4 ஓவர்களிலேயே 346 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திர 97 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் பயிற்சி போட்டி என்பதனாலேயே இன்றைய போட்டியில் சதம் அடித்த பின்னர் ரிஸ்வான் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு தான் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சதம் என்றால் அது சதம் தான். பாகிஸ்தான் அணிக்காக எந்த போட்டியில் நான் சதம் அடித்தாலும் எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அதேபோன்று நாங்கள் இந்தியா வரும்போது இந்திய ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் மிகச் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தானில் எங்களுக்கு கிடைப்பது போன்ற அன்பு இங்கும் கிடைக்கிறது. அந்த வகையில் விமான நிலையத்தில் ரசிகர்கள் எங்கள் மீது மிகுந்த அன்பு வைத்து சிறப்பாக வரவேற்று இருந்தனர்.

இதையும் படிங்க : வீடியோ : எங்கய்யா ஃபிரேமில் ஆளையே காணோம்.. ஸ்டம்பிங்கை தடுக்காமல் போஸ் கொடுத்த பாக் பேட்ஸ்மேன்.. கடுப்பான பாபர் அசாம்

டி20 கிரிக்கெட் நான் ஓப்பனிங் செய்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் விளையாடுகிறேன். ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடுகிறேன். இப்படி அணியின் நிர்வாகம் என்னை எங்கு விளையாட வைக்கிறதோ அதற்கு ஏற்றார் போன்று நான் எனது பங்களிப்பை வழங்க விரும்புகிறேன். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. சவுத் ஷாக்கில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் என்று நினைக்கிறேன் என முகமது ரிஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement