எங்கய்யா ஃபிரேமில் ஆளையே காணோம்.. ஸ்டம்பிங்கை தடுக்காமல் போஸ் கொடுத்த பாக் பேட்ஸ்மேன்.. கடுப்பான பாபர் அசாம்

Abdullah Shafiq.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் செப்டம்பர் 29ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 345/5 ரன்கள் குவித்து அசத்தியது.

குறிப்பாக இந்திய மண்ணில் முதல் முறையாக விளையாடிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக சதமடித்து 103* (94) ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 80 (84) ரன்களும் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சாட்னர் 2 விக்கெட்கள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 346 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

பரிதாப ஸ்டம்ப்பிங்:
இருப்பினும் அடுத்ததாக காயத்திலிருந்து குணமடைந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடிய 54* (50) ரன்கள் குவித்தார். அவரை விட மறுபுறம் அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா 97 (72) ரன்கள் விளாசி சதத்தை நழுவ விட்டார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல் 59* (57) ரன்களும் மார்க் சாப்மேன் 65* (41) ரன்களும் ஜிம்மி நீசம் 33 (21) ரன்களும் எடுத்தனர்.

அதனால் 43.4 ஓவரிலேயே 346/5 ரன்கள் எடுத்த நியூசிலாந்து எளிதாக வென்றதால் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உசாமா மிர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு சுமாரான ஃபார்மில் இருக்கும் பகார் ஜமானுக்கு பதிலாக அப்துல்லா சபிக் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இருப்பினும் ஆரம்பத்திலேயே இமாம்-உல்-ஹக் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் பொறுப்புடன் விளையாட வேண்டிய அவர் மிட்சேல் சாட்னர் வீசிய 12வது ஓவரின் 2வது பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பல அடிகள் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். ஆனால் பந்தை சரியாக கணிக்காமல் மொத்தமாக தவற விட்ட அவரை டாம் லாதம் எளிதாக ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: IND vs AUS 2023 : ஏபிடி, சச்சினின் ஆல் டைம் உ.கோ சாதனையை தகர்த்த வார்னர்.. புதிய அதிரடி உலக சாதனை

அதை விட பந்தை தவற விட்டுவிட்டோமே என்ற பதற்றத்தில் பின்னோக்கி காலை வைத்து அவுட்டாவதை தடுக்க அவர் கொஞ்சம் கூட முயற்சிக்கவில்லை. மாறாக பக்கவாட்டு கோணத்தின் வீடியோ ஃப்ரேமில் தெரியாத அளவுக்கு பல அடிகள் முன்னோக்கி சென்ற அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வகையில் சில வினாடிகள் நின்றது பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்பாக விட்டது. அவர்களை போலவே எதிர்புறமிருந்த கேப்டன் பாபர் அசாம் “பயிற்சி போட்டியில் போய் அவசரப்பட்டு இப்படியா அவுட்டாவீங்க” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்ததை தொடர்ந்து சபிக் மெதுவாக பெவிலியன் நோக்கி நடந்தார்.

Advertisement