2023 உ.கோ டீம்ல அவரை கழற்றி விட்டு தப்பு பண்ணிட்டீங்க.. பெஞ்சிலாவது வெச்சுருக்கலாம் – தேர்வுகுழுவை விமர்சித்த யுவராஜ் சிங்

Yuvraj Singh 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே இடது கை ஸ்பின்னராக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் வேண்டுமென்ற நோக்கத்துடன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த உலகக்கோப்பை அணியில் யுஸ்வேந்திர சஹால் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய தவறாக அமையலாம் என்று யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

யுவராஜ் விமர்சனம்:
குறிப்பாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவர் நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமென தேர்வுக்குழுவை விமர்சிக்கும் யுவராஜ் சிங் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சஹாலை சேர்க்காமல் விட்டது நிச்சயமாக தவறாக அமையலாம். இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்”

“குறைந்தபட்சம் அவரை 15 பேர் கொண்ட அணியிலாவது வைத்திருக்கலாம். ஏனெனில் அவரைப் போன்ற லெக் ஸ்பின்னர் எப்போதுமே உங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். குல்தீப் தற்சமயத்தில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் சுழலுக்கி சாதகமான மைதானங்களில் சஹால் எதிரணிக்கு மிகப்பெரிய ஆபத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார். எனவே 3வது வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா சமநிலையை ஏற்படுத்துவார் என்ற சூழ்நிலையில் சஹால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்”

- Advertisement -

“அதே சமயம் பும்ரா காயத்திலிருந்து கம்பேக் இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆசிய கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு இருந்த காயங்கள் பற்றி எனக்கு கவலை இருந்தது. மேலும் ஆசிய கோப்பை வென்றதால் உங்களுக்கு உலகக்கோப்பை கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் அது இந்திய அணி நல்ல ஃபார்முக்கு திரும்பியதை காட்டியது” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2023 உ.கோ அணியில் செலக்ட்டானது முக்கியமல்ல அஸ்வின்.. மறக்காம அதை செய்ங்க.. வாழ்த்துடன் வாசிம் ஜாபர் கலகலப்பான கோரிக்கை

முன்னதாக 2017 முதல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்துள்ள சஹால் புதிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்டார். அதன் காரணமாக அவரை விட நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதில் ஆசிய கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்று குல்தீப் யாதவ் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இறுதிக்கட்ட உலகக்கோப்பை அணியிலும் சஹால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement