2023 உ.கோ அணியில் செலக்ட்டானது முக்கியமல்ல அஸ்வின்.. மறக்காம அதை செய்ங்க.. வாழ்த்துடன் வாசிம் ஜாபர் கலகலப்பான கோரிக்கை

Wasim Jaffer
- Advertisement -

உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் ஐசிசி 2023 உலக கோப்பையை வெல்வதற்காக இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணியில் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறிய அக்சர் பட்டேலுக்கு பதிலாக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் 2015 உலகக்கோப்பையிலும் விளையாடி 2017 சாம்பியன்ஸ் டிராபி வரை முதன்மை ஸ்பின்னராக இருந்தார். இருப்பினும் அதன் பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஓரம் கட்டப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்ததால் 2021, 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

ஜாபர் கோரிக்கை:
ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 2 வருடங்களாக விளையாடாமல் இருந்த அவருக்கு உலகக் கோப்பை அணியில் ஏற்கனவே தேர்வான குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதில் 4 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அஸ்வின் கடைசி நேரத்தில் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் உலக கோப்பையில் தேர்வாகியுள்ள அஷ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வாஷிங் ஜாபர் இருபுறமும் விக்கெட்டுகளை எடுக்குமாறு கலகலப்பான கோரிக்கை வைத்துள்ளார். அதாவது பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெளியேறும் பேட்ஸ்மேன்களுக்கு கருணை காட்டாமல் உங்களுக்கே உரித்தான பாணியில் மன்கட் முறையில் அவுட் செய்து விக்கெட்களை எடுக்குமாறு அஸ்வினுக்கு அவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன் அஸ்வின். நீங்கள் இருபுறமும் நிறைய விக்கெட்டுகளை எடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக பவுலர்கள் ஒரு இன்ச் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே காலை வைத்து பந்து வீசினாலும் அதற்கு தண்டனையாக ப்ரீ ஹிட் கொடுக்கப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள் பல அடிகள் வெளியேறுவது நியாயமா என்ற கோட்பாட்டை கொண்ட அஸ்வின் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார்.

அதற்கு உலக அளவில் விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டாலும் விதிமுறைக்குட்பட்டே செயல்பட்டதாக தெரிவித்த அவர் அதை அனைத்து பவுலர்களும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய தொடர்ச்சியான குரலில் நியாயம் இருந்ததால் எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகள் மன்கட்டை தற்போது அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement