அவங்க 4 பேரையும் இந்தியன் டீம் செலக்ட் பண்ணது ரொம்ப கரெக்ட்டான முடிவு – யுவ்ராஜ் சிங் மகிழ்ச்சி

Yuvi
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த புதிய இந்திய அணியின் தேர்வு குறித்து சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : இந்திய அணியில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை பார்ப்பதில் மகிழ்ச்சி. இவர்கள் நால்வருமே இந்த தொடரில் பங்கேற்க தகுதியானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா சென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் அவரது மோசமான பார்ம் காரணமாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் இருந்த அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்திய அணியில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரை தவறிவிட்டார். அவருக்கு தற்போது மீண்டும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஹாட்ரிக் எடுத்தா அது இந்த 3 இந்திய வீரர்களின் விக்கெட்டாக தான் இருக்கனும் – ஷாஹீன் அப்ரிடி விருப்பம்

அதை தவிர்த்து உள்ளூர் கிரிக்கெட்டில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தீபக் ஹூடா மற்றும் எப்போதுமே ரன்களை குவித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களை தவிர்த்து பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரவி பிஸ்னாய்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement