இந்திய அணியில் நான் மீண்டும் கம்பேக் கொடுக்க அவரே காரணம். அவ்ளோ சப்போர்ட் பண்ணாரு – யுவ்ராஜ் சிங் உருக்கம்

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான யுவராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 2017 வரை 304 ஒருநாள் போட்டிகள் 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 132 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

yuvi

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் என ஆல்ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலக கோப்பைகளை வென்ற போது அவர் தொடர் நாயகனாக திகழ்ந்துள்ளார்.

அந்த அளவிற்கு இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஆனால் அவர் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது திடீரென புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது மொத்த வாழ்க்கையும் அந்த பாதிப்பு புரட்டி போட்டது.

Yuvi

ஏனெனில் புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு மீண்டு வந்த அவரால் பழைய பேட்டிங் பார்மை மீட்டெடுக்க முடியவில்லை. இந்நிலையில் தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப நினைத்த போது விராட் கோலி கொடுத்த ஆதரவு தான் எனது கம்பேக்கிற்கு காரணமாக அமைந்தது என யுவராஜ் சிங் வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப நினைத்த போது கோலி எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரோட ஆதரவால் தான் நான் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தேன். விராட் கோலி இல்லையென்றால் நிச்சயம் நான் இந்திய அணிக்கு திரும்ப வந்திருக்க முடியாது.

இதையும் படிங்க : துணை கேப்டனா ரகானேவுக்கு பதில் அந்த 2 பேர போட்ருக்கலாம் – ஐடியா இல்லாத தேர்வுக்குழுவை சாடிய கவாஸ்கர்

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை தோனி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அதோடு அணியின் முக்கிய வீரர் நான்தான் என்றும் கூறியிருந்தார். ஆனால் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணித்தேர்வின் போது தேர்வுக்குழு என்னை தேர்வு செய்ய விரும்பவில்லை என தோனி என்னிடம் வெளிப்படையாகவே கூறியதாக யுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement