துணை கேப்டனா ரகானேவுக்கு பதில் அந்த 2 பேர போட்ருக்கலாம் – ஐடியா இல்லாத தேர்வுக்குழுவை சாடிய கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் சுமாராகவே செயல்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் அவர்களுக்கு ஓய்வு கூட கொடுக்காமல் மீண்டும் பாதுகாப்பாக தேர்வு செய்துள்ள தேர்வுக்குழு மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Navdeep Saini India Rahane

- Advertisement -

சரி புஜாரா காலம் கடந்து சொதப்புகிறார் என்பதால் கழற்றி விட்டதை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் அவருக்கு பதிலாக யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தான் உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் பொதுவாக இந்திய டெஸ்ட் அணிக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் அசத்தும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடந்த 3 வருடங்களாக ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து அசத்தி வரும் சர்பராஸ் கான் 79 என்ற சராசரியில் ரன்களை குவித்து இந்தியாவுக்கு விளையாடும் லட்சியத்துடன் வெறித்தனமாக போராடி வருகிறார்.

வருங்கால துணை கேப்டன்:
ஆனால் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் அவரை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு 2023 சீசனில் அசத்திய காரணத்தால் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜை தேர்ந்தெடுத்துள்ளது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதை விட வருங்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டிய தேர்வுக்குழு மீண்டும் ரகானேவை துணை கேப்டனாக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Ajinkya Rahane WTC Final

36க்கு ஆல் அவுட்டான பின் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த அனுபவத்தை அவர் கொண்டிருந்தாலும் ஏற்கனவே கடந்த 2022 ஜூலையில் இதே போல கம்பேக் கொடுத்த புஜாராவை துணை கேப்டனாக அறிவித்த தேர்வுக்குழு தற்போது மொத்தமாக கழற்றி வைத்துள்ளது. அத்துடன் ரோகித் சர்மா – ரகானே ஆகிய இருவருமே 35 வயதை கடந்து விட்டதால் ஒரு இளம் வீரரை துணை கேப்டனாக அறிவித்து வளர்த்தால் தானே வரும் காலங்களில் இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு வளர்வார் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

- Advertisement -

சொல்லப்போனால் ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதிலும் காயத்தால் ஒரு தொடருக்கு மேல் தாக்குப் பிடிக்காமல் வெளியேறினர். இந்நிலையில் ரகானேவுக்கு பதிலாக ஓரளவு காயங்கள் இல்லாமல் நிலைத்து விளையாடி வரும் சுப்மன் கில் அல்லது அக்சர் படேல் ஆகியோரை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Gavaskar

 

- Advertisement -

“அஜிங்க்ய ரகானே துணை கேப்டனாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் இந்த சமயத்தில் ஒரு இளம் வீரரை கேப்டனாக வளர்க்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளீர்கள். குறைந்தபட்சம் இளம் வீரர்களிடம் நாங்கள் வருங்கால கேப்டனை உருவாக்க உள்ளோம் என்றாவது சொல்லுங்கள். அப்போது தான் அந்த இளம் வீரர்கள் தங்களை வருங்கால கேப்டனாக நினைத்து வளர்வார்கள். இந்த நிலைமையில் சுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் துணை கேப்டனாக அறிவிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர்”

இதையும் படிங்க:இதுல இந்தியாவின் வருங்காலம் எங்க இருக்கு? 1996இல் கில்கிறிஸ்ட் எப்டி வந்தாருன்னு பாருங்க – தேர்வுக்குழுவை விளாசிய சாஸ்திரி

“அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார். அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்குவது எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வைக்கும். எனவே என்னுடைய பார்வையில் இந்த இருவர்கள் தான் துணை கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடியவர்கள். இல்லையென்றாலும் கூட இசான் கிசான் போன்ற ஏதேனும் அணிகள் தங்களுடைய இடத்தை நிலையாட்டிய இளம் வீரருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement