இதுல இந்தியாவின் வருங்காலம் எங்க இருக்கு? 1996இல் கில்கிறிஸ்ட் எப்டி வந்தாருன்னு பாருங்க – தேர்வுக்குழுவை விளாசிய சாஸ்திரி

Ravi-Shastri
- Advertisement -

ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி நிறைய விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் முக்கிய காரணமாக அமைந்த நிலையில் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு ஐபிஎல் தொடரில் அசத்தியத்திற்காக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை தேர்ந்தெடுத்து ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து அசத்தி வரும் சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதனால் ரஞ்சி கோப்பையை குப்பையில் தூக்கி போடுங்கள் என்று நிறைய ரசிகர்களும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதை விட 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் இந்த தொடரில் பெரும்பாலும் இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணம் தொடங்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெயருக்காக 2 இளம் வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு மீண்டும் கிட்டத்தட்ட அதே அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தொலைநோக்கு பார்வை:
குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை டி20 கிரிக்கெட்டில் உருவாக்குவது போல் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் இளம் அணியை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இந்த அணி அறிவிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எடுத்துக்காட்டாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரை துணை கேப்டனாக நியமிக்காமல் மீண்டும் ரகானேவை அறிவித்துள்ளது அதற்கு மற்றொரு சாட்சியாகும். இந்நிலையில் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் அளவுக்கு தேர்வுக்குழு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படவில்லை என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

Rahane

குறிப்பாக 1999இல் இயன் ஹீலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியானவராக இருந்தும் ஆடம் கில்கிறிஸ்டை ஆஸ்திரேலியா வளர்த்தது போன்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியதற்கு பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை வைத்து உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஒருபுறம் இயன் ஹீலி சிறப்பாக செயல்பட்ட நிலையில் மறுபுறம் ஆடம் கில்கிறிஸ்ட் இளம் வீரராக வளர துவங்கினார். அப்போது ஹீலி எளிதாக இன்னும் 1 – 2 வருடங்கள் விளையாட தகுதியானவராக இருந்தார்”

- Advertisement -

“ஆனால் உலக கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு உலகத்தை வீழ்த்தும் அளவுக்கு திறமை கொண்ட ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கும் பாதையை ஆஸ்திரேலியா பார்த்தனர். அந்த வகையில் நம்முடைய தேர்வுக்குழுவிடம் தெளிவான தகவல் தொடர்பு மற்றும் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டியது அவசியமாகும். என்னுடைய தொலைநோக்கு பார்வை எப்போதும் இளமை மற்றும் அனுபவம் கலந்த வலுவான இந்திய அணியைக் கொண்டதாக இருக்கும். அதே சமயம் இளம் வீரர்கள் சீனியர்களுக்கு போட்டி போடுபவர்களாக இருக்க வேண்டும்”

Ravi-Shastri

“அந்த கோணத்தில் ஒரு இளம் வீரர் அசத்தினால் என்னுடைய ஆதரவு அவருடைய பக்கம் திரும்பும். மேலும் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் வரும்போது சீனியர்கள் ஒதுங்க வேண்டும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கணிசமாக குறைய வேண்டும். ஐபிஎல் தொடர் காரணமாக நமக்கு நிறைய தரமான வீரர்கள் கிடைக்கின்றனர். ஆனால் அதற்காக ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களை நேரடியாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை நான் ஆதரிக்கவில்லை”

இதையும் படிங்க:TNPL 2023 : சொந்த மண்ணில் சேலத்தை சுருட்டி வீசி வீரத்தை காட்டிய மதுரை – முதல் வெற்றியை பெற்றது எப்படி

“முதலில் அவர்களுடைய முதல் தர போட்டிகளின் விவரங்களை பார்க்க வேண்டும். நானாக இருந்தால் தேர்வுக்குழுவுடன் அமர்ந்து அந்த வீரர் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் எவ்வளவு ரன்கள் அடித்துள்ளார் என்று பார்ப்பேன். குறிப்பாக வீரர்களிடம் பொறுமை இருப்பது மிகவும் அவசியமாகும். அதே சமயம் சண்டை போடுவதற்கு தயாராகவும் இருக்கும் வீரர்கள் தான் பயமற்றவர்களாக இருக்கும் தரத்தை கொண்டிருப்பார்கள். இந்தியாவில் அந்தளவுக்கு நிறைய வீரர்கள் இருப்பதால் உங்களுடைய பெஞ்ச் மிகவும் பலமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement