இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைக்காம போக அந்த ஒரு சம்பவம் தான் காரணம் – மனம்திறந்த யுவ்ராஜ் சிங்

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2017-ஆம் ஆண்டு வரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் 19 வயதிலேயே வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமானார்.

அதோடு குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பான ஆல்ரவுண்டாக வலம் வந்த யுவ்ராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது ராகுல் டிராவிட் கேப்டனாக செயல்பட்ட வேளையில், துணை கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டார். ஆனால் அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிராகவும் மோசமான தோல்வியை சந்தித்து முதல் சுற்றிலேயே வெளியேறியதால் டிராவிட் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

- Advertisement -

இதன் காரணமாக துணை கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ அந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை புதிய கேப்டனாக நியமித்தது. 2007-ஆம் ஆண்டு எல்லாம் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கவில்லை என்பதனால் அதற்கு முன் எப்போதுமே கேப்டன்சி அனுபவம் இல்லாத தோனி முதல்முறையாக கேப்டன்சி வாய்ப்பை பெற்றது அனைவரது மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் தனக்கு 2007-ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பது குறித்து யுவராஜ் வெளிப்படையான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அந்த சமயத்தில் நான்தான் கேப்டனாக மாறி இருக்க வேண்டியது. ஆனால் அப்போதைய பயிற்சியாளரான கிரெய்க் சேப்பலுடன் எனக்கு சரியான உறவு இல்லை.

- Advertisement -

அதோடு நான் சச்சின் டெண்டுல்கருக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து வந்தாலும், சேப்பல் மீது விரோதமாக இருந்ததாலும் பிசிசிஐ என்னை கேப்டனாக்க கூடாது என்று நினைத்து என்னை தவிர்த்து வேறு யாராவது கேப்டனாக்க வேண்டும் என்று முடிவு செய்தே தோனியை நியமித்திருப்பார்கள். இதில் எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : 29 வயசுலேயே உங்க கரியரை காலி பண்ணியது தோனி தான்.. கொந்தளித்த ரசிகருக்கு – இர்பான் பதான் கொடுத்த பதில்

இருப்பினும் அதுதான் அவர்களின் முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் துணை கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்படும் போது ஏதாவது ஒரு வீரர் நிச்சயம் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்தேன். அப்பொழுதுதான் தோனி முதல் முறையாக கேப்டன் ஆனார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும் 16 ஆண்டுகள் கழித்து கிரெய்க் சேப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவும், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாகவே தனக்கு கேப்டன் பதவி கிடைக்காமல் போனது என்று அவர் வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement