29 வயசுலேயே உங்க கரியரை காலி பண்ணியது தோனி தான்.. கொந்தளித்த ரசிகருக்கு – இர்பான் பதான் கொடுத்த பதில்

Irfan-and-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 2012 வரை 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 2008-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 103 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது கரியரின் மிக இளம் வயதிலேயே அணிக்குள் வந்தாலும் 29 வயதிலேயே ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் அவரது கரியரில் இந்திய அணி பெற்ற மிக முக்கியமான வெற்றிகளில் அவரது பங்கும் உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் போது தோனியின் தலைமையிலான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார். 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட அவர் 2020 ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.

தற்போது 39 வயதாகும் இர்ஃபான் பதான் லெஜன்ட் லீக் தொடரில் விளையாடி வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த லெஜண்ட் லீக் தொடரில் கூட அவரது தலைமையிலான அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் : இப்படி உங்களின் கிரிக்கெட் கரியர் காணாமல் போனதற்கு காரணம் தோனி தான் என்று காட்டமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அந்த ரசிகர் பதிவிட்டுள்ள கருத்தில் : நான் எப்போதெல்லாம் இர்ஃபான் பதானை மற்ற லீக் போட்டிகளில் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் தோனி மற்றும் அவரை சார்ந்த நிர்வாகத்தை சபிக்கிறேன். ஏனெனில் 29 வயதிலேயே உங்களது கரியரை அவர்கள் தான் காலி செய்தனர். ஏழாம் இடத்திற்கு சரியான வீரர் நீங்கள்தான் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே உங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தும் அவர்கள் உங்களை அணியில் இருந்து நீக்கிவிட்டனர் என்று தோனியை சபிக்கும்படி பதிவினை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படிங்க : அண்டர்-19 ஆசிய கோப்பை 2023 : 13 ரன்ஸ் 7 விக்கெட்.. நேபாளை ஊதி தள்ளிய இந்திய அணி மாஸ் வெற்றி

அதனை கண்ட இர்பான் பதான் அவருக்கு பதில் அளிக்கையில் : “யார் மீதும் குற்றம் சொல்ல வேண்டாம்”, “உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என கனிவான முறையில் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement