- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிளிண்டாப் கூட சண்டை போட்டு 6 சிக்ஸ் அடிச்சதுக்கு அப்புறம் தோனி என்கிட்ட சொன்னது இதுதான் – யுவ்ராஜ் சிங் பகிர்வு

கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளையும் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியிருந்தார்.

6 சிக்ஸர்களை அடித்தது குறித்து பேசிய யுவ்ராஜ் சிங் :

அவரது அந்த அதிரடியான சிக்ஸர்களை இன்றளவும் ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த போட்டியின் போது தான் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க என்ன காரணம்? என்றும் அப்போது கேப்டனாக இருந்த தோனி தன்னிடம் என்ன கூறினார்? என்பது குறித்தும் பல்வேறு தகவல்களை தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் தோனியின் என்னிடம் வந்து : “நீங்கள் எப்பொழுது எல்லாம் எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வந்தாலும் அப்போதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கிறது”. நன்றாக விளையாடுகிறீர்கள் என்று கூறினார்.

அந்த போட்டியின் 18-வது ஓவரின் கடைசி பந்தில் நான் சிங்கிள் அடித்து விட்டு எதிர்ப்புறம் வந்தேன். அப்போது பிளிண்டாப் என்னிடம் வந்து இது ஒரு அதிர்ஷ்டமான ஷாட் என்று கூறினார். உடனே எனக்கு கோபம் வந்து உன் கழுத்தை அறுப்பேன் என்று கூறினேன்.

- Advertisement -

கோபத்தில் இருந்த நான் அடுத்த ஓவரை யார் வீசினாலும் சிக்ஸர்களாக விளாச நினைத்தேன். அதன்படியே அந்த 6 சிக்ஸர்களையும் அடித்தேன். ஆனால் இந்த போட்டி முடிந்த பின்னர் பிளிண்டாப் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் என்னிடம் வந்து வாழ்த்து கூறி கை குலுக்கி சென்றார்.

இதையும் படிங்க : 149க்கு ஆல் அவுட்.. சவால் விட்ட வங்கதேசத்தை அரை நாளில் முடித்த இந்தியா.. பும்ரா 400 தொட்டு அபார சாதனை

அதனால் நானும் போட்டி முடிந்து அவரிடம் சாமாதானமாக சென்றேன். அவர் களத்தில் நடந்ததை அங்கேயே விட்டுவிட்டு வந்து என்னிடம் பேசியதால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -