இப்படியே போனா டெஸ்ட் கிரிக்கெட் அழிஞ்சிடும். யாரும் விளையாட மாட்டாங்க – யுவராஜ் சிங் அதிருப்தி

Yuvi
- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் என்பது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அனைத்து வகையிலும் கடும் சவால்களை அளிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால் வெறும் 3 – 4 மணி நேரத்தில் முடிவு கிடைத்துவிடும் டி20 போட்டிகளின் வருகையால் 5 நாட்களானாலும் டிராவில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகளை பெரும்பாலான ரசிகர்கள் விரும்ப மறுக்கின்றனர். அதன் காரணமாகவே நூற்றாண்டு வரலாறு கொண்ட டெஸ்ட் போட்டிகள் அழிந்து வருகிறது என்று பல கிரிக்கெட் வல்லுநர்களும் ஜாம்பவான்களும் அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அழிய விடக்கூடாது என்ற நோக்கத்தில் அதற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த 2019இல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு போலவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற உலக கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதன் காரணமாக தற்போது மீண்டும் டெஸ்ட் போட்டிகள் உயிர்த்தெழ தொடங்கியுள்ளதால் அதை ஆர்வத்துடன் பார்க்க ரசிகர்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.

குறையும் டெஸ்ட் பற்று:
பொதுவாக ஒரு வீரரின் உண்மையான திறமையையும் தன்னம்பிக்கையையும் பொறுமையையும் சோதிக்கும் ஒரு வகையான கிரிக்கெட் என்பதாலேயே அதை டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நவீன டி20 கிரிக்கெட்டில் வெறும் 50 பந்துகளில் இரு மடங்கு வேகமாக 100 ரன்களை கூட எளிதாக அடித்து விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 பந்துகளை சந்தித்து 100 ரன்கள் அடிப்பதில் தான் உண்மையான கடினம், சவால், மதிப்பு என அனைத்தும் அடங்கியுள்ளது. ஆனால் அப்படிப்பட்ட மதிப்பு மிகுந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற தற்போதைய இளம் வீரர்களின் குறைவான எண்ணத்தை ஐசிசி உட்பட யாராலும் எது செய்தாலும் உயர்த்த முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது.

அதற்கும் காரணம் டி20 கிரிக்கெட் தான். ஆம் 5 நாட்களுக்கு நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை விட ஒருசில மணி நேரங்கள் மட்டும் விளையாடினால் போதும் பெயரையும் புகழையும் பணத்தையும் சம்பாதித்து விடலாம் என்று நினைக்கும் இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளை விட வெள்ளை பந்து போட்டிகளுக்கே நிறைய முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் வெறும் 2 மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் கோடிக்கணக்கில் சம்பளம் கொட்டி கொடுக்கப்படுவதால் இப்போதைய இளம் தலைமுறை வீரர்கள் எப்படியாவது டி20 போட்டிகளில் விளையாடி சம்பாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சி எடுக்கிறார்களே தவிர டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்வது கிடையாது.

- Advertisement -

யுவராஜ் வேதனை:
இந்நிலையில் டி20 போட்டிகளின் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு. “நிறைய பேர் டி20 கிரிக்கெட்டை பார்க்கவும் விளையாடவும் விரும்புவதால் டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து வருகிறது. எதற்காக ஒருவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடி 50 லட்சம் பெறுவதை விட்டுவிட்டு 5 நாட்கள் விளையாடி வெறும் 5 லட்சம் பெறவேண்டும்? இன்று நிறைய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பே 7 – 10 கோடிகளை பெற்று விடுகிறார்கள்”

Yuvi

“அதுவும் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து பழகியவர்களுக்கு 50 ஓவர் போட்டிகளை பார்த்தால் அதுவே டெஸ்ட் கிரிக்கெட் போல காட்சியளிக்கிறது. அதனால் நிறைய பேர் 30 ஓவர்கள் கடந்ததும் இன்னும் இவர்கள் 20 ஓவர்கள் விளையாடுவதைப் பார்க்க வேண்டுமா என்று அலுத்துக் கொள்கிறார்கள். எனவே டி20 கிரிக்கெட் அனைத்தையும் புறம் தள்ளி வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது டி20 கிரிக்கெட் வருகையால் டெஸ்ட் போட்டி மட்டுமல்லாது சமீப காலங்களாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் அழிய தொடங்கியுள்ளது என்று யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் விளையாடி 5 லட்சம் சம்பளத்தை வாங்குவதற்கு பதில் டி20 போட்டியில் விளையாடிய கோடிஸ்வரராக மாறிவிடலாம் என்ற நோக்கத்தில் இளம் வீரர்கள் வளர்ந்து வருவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்றும் எச்சரித்துள்ளார்.

Top 5 Exciting Young Talented Players to Watch Out in IPL 2022

அவர் கூறுவது போல அந்த காலத்தில் நிறைய இளம் வீரர்கள் எப்படியாவது சம்பளத்தை பற்றி யோசிக்காமல் நாட்டிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் அதுதான் உண்மையான அங்கீகாரம் கவுரவம் எனக் கருதி வளர்ந்தார்கள். ஆனால் தற்போதைய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் போதும் என்ற மனப்பான்மையுடன் வளர்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் தங்களது வாய்ப்பை இழக்கப்போகும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

எடுத்துக்காட்டாக இஷான் கிசான் போன்ற வீரர்கள் ஒரே வருடத்தில் 15.25 கோடி சம்பாதித்து விட்டதால் வாழ்க்கைக்கு இதுவே போதுமானது இனிமேல் நாம் ஏன் மிகவும் கடினமாக உழைத்து நாட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இயற்கையாகவே யோசிப்பார்கள். அதுபோன்ற எண்ணத்தை இளம் வீரர்களின் மனதில் ஏற்படுத்தியது டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய பாதகம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement